சிறையில் காதலன், வெளியில் கே டி வேலை பார்த்து 200 கோடி மோசடி - பிரியாணி பட நடிகை கைது.

By Rajkumar · 7/9/2021

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் பிரியாணி. இந்த படத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் கடை திறப்பு விழாவிற்கு வரும் மூன்று அழகிகளில் ஒருவராக நடித்தவர் தான் லீனா மரியா பால். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். இதற்கு பிறகு இவர் மெட்ராஸ் கஃபே என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது பிரியாணி பட இளம் நடிகை லீனா மரியாவை டெல்லி போலீசார் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் காதலி தான் லீனா மரியா பால். இவர் பிரபல தொழிலதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதியிடம் 200 கோடி ரூபாய் ஏமாற்றி பணம் வாங்கியுள்ளார். இதை அறிந்த டெல்லி போலீசார் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக நடிகை லீனா மரியாவை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிதி சிங் தம் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியுள்ளது, தன் கணவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக கூறி தான் என்னிடம் இருந்து லீனா பணம் வாங்கினார். ஆனால், அவர் ஜாமின் வாங்கித் தராமல் ஏமாற்றி உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் நடந்த போது சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் இருந்ததாகவும், சிறையில் இருந்து கொண்டே அவர் லீனா மரியா பால் மூலம் இந்த பண மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் லீனா மரியா பால் உடன் சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர்களான கம்லேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் லீனா மரியாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full