இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பர்த்மார்க். இந்த படத்தில் சபீர் கல்லராக்கல், மிர்ணா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஹீரோ ஏற்கனவே சார்பாட்ட பரம்பரை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதேபோல் மிர்ணா ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உளவியல் திரில்லரான பர்த்மார்க் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் கார்கில் போருக்கு பின்னர் சில ராணுவ வீரர்கள் ‘post war trauma’ என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இவர்கள் மனதளவில் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறார்கள். அதில் ஒரு ராணுவ வீரர் தான் ஹீரோ சபீர். இவருடைய மனைவி ஜெனிபராக மிர்ணா நடித்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவிக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்க்கவும், தனக்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் தன்வந்திரி குழந்தை பேரு கிராமத்திற்கு ஹீரோ அழைத்து செல்கிறார்.

Advertisement

ஒரு கட்டத்தில் அந்த குழந்தைக்கு தான் அப்பா என்ற சந்தேகம் அவருக்கு வருகிறது. இறுதியில் ஹீரோ தன்னுடைய மனைவியின் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றினாரா? ஹீரோவுக்கு இருந்த வியாதி தீர்ந்ததா? இவருடைய பிரச்சினையால் மனைவி- குழந்தையை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை. வித்தியாசமான கதையை இயக்குனர் எடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை மேக்கிங்கில் கொஞ்சம் வித்தியாசத்தை காண்பித்து இருக்கிறார்.

ஆனால், இது ரசிகர்களை கவருமா?. என்றால் சந்தேகம் தான் இன்னும் கொஞ்சம் இயக்குனர் தன்னுடைய கதை களத்தை கொண்டு சென்ற விதத்தில் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருக்கும். மேலும், படங்களில் ராணுவ வீரர்களை மாஸாக காட்டி இருக்கிறார்கள். இதில் போருக்கு பின் அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளையும் குடும்பங்களையும் குறித்து இயக்குனர் காண்பித்து இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோ சபீர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

Advertisement

இவருக்கு ஜோடியாக நடித்த மிர்ணாவும் அருமையாக நடித்திருக்கிறார். கதைக்களம் நன்றாக இருந்தாலும் பெரிதாக சுவாரஸ்யம் எதுவும் இல்லை. சொல்லப்போனால், முழு படம் பார்த்த திருப்த்தி பார்வையாளர்களுக்கு கொடுக்கவில்லை. பின்னணி இசை சுமார், பாடல்கள் செட்டாகவில்லை. மேலும், இந்த படம் 90களில் இறுதிப்பகுதியில் நடப்பது போல காண்பித்து இருக்கிறார்கள். சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.

Advertisement

படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். தங்கவேலின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. ஒரு எளிமையான கதையை நேரடியாக சுவாரசியமாக கொடுத்திருந்தால் சூப்பரான உளவியல் திரில்லர் படமாக இருந்திருக்கும். மொத்தத்தில் ரொம்ப ரொம்ப சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

கதைக்களம் அருமை

பின்னணி இசை ஒளிப்பதிவு ஓகே

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்

உளவியல் படம்

குறை:

படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்

இயக்குனர் திரைக்கதையை கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்

பாடல்கள் படத்தில் ஒர்க்கவுட் ஆகவில்லை

காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

மொத்தத்தில் பர்த்மார்க் – மக்கள் மனதில் மார்க்கை ஏற்படுத்தவில்லை

Advertisement