ஆனந்த பவன் உரிமையாளரின் கருத்துக்கு பாஜக நிர்வாகி பதிவிட்டிருக்கும் சர்ச்சை பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மிகப் பிரபலமான சைவ உணவகங்களில் ஒன்று ஆனந்த பவன். இந்த ஓட்டலின் கிளைகள் பல மாவட்டங்களில் இருக்கிறது. இந்த ஹோட்டலின் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா. இவர் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில் அவர் ஹோட்டல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அப்போது தொகுப்பாளர் சித்ரா லட்சுமணன், ஒரு காலகட்டத்தில் பார்த்தீங்கன்னா ஹோட்டல்களெல்லாம் குறிப்பாக சைவ உணவகங்கள் பெரும்பாலும் ஐயர்களிடம் தான் இருந்தது. அதற்கு பிறகு தான் மெல்ல மெல்ல மாறியது. அந்த மாற்றத்தை குறித்து நீங்கள் சொல்ல விரும்புவது என்று கேட்டார். சீனிவாச ராஜா, அதற்கு காரணம் பெரியார் தான். குலத்தொழிலை மாற்றியவர்.

Advertisement

ஆனந்த பவன் ஹோட்டல் உரிமையாளர்:

யார் வேண்டுமானாலும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்று புரட்சி செய்தார். அரசுகளும் ஆதரவாக இருந்தால் குறிப்பிட்ட சமுதாய மக்கள் சேர்ந்த தொழிலை யார் வேணாலும் பண்ணலாம். கடல்ல யார் வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாம் என்று மாற்றங்கள் வந்ததால் தான் இந்த ஜாதி மாறியது என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருந்ததற்கு இந்து மத மக்கள் கடும் எதிர்ப்பை வருகிறார்கள். அதோடு அவர் நடத்தும் ஹோட்டல்களை புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

பாஜக மோதிலால் பதிவு:

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் மாநில ஐடி விங் செயலாளர் மோதிலால் என்பவர் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், பிராமணர்கள் கையில் ஹோட்டல்கள் இருந்தவரை, இவ்வளவு மருத்துவமனைகளுக்கு அவசியமே இல்லாமல் இருந்தது. தற்போது எவ்வளவு ஹோட்டல்கள் இருக்கிறதோ, அதே அளவுக்கு மருத்துவமனைகளும் உருவாகியுள்ளன! குறிப்பாக, புற்றீசல் போல கருத்தரிப்பு மையங்கள்!” என்று கூறி Boycott A2B என்ற ஹேஸ்டேக்கையும் போட்டுள்ளார்.

Advertisement

நெட்டிசன்கள் ஆதங்கம்:

தற்போது பாஜக கட்சி உறுப்பினர் பதிவிட்ட பதிவு தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும், ஆனந்த பவன் உரிமையாளர் எந்த பிராமணர்களுக்கு எதிராகவோ இந்துக்களுக்கு எதிராகவோ எந்த ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. அவர் எல்லா தொழிலையும் எல்லோரும் செய்யலாம் என்றுதான் சொன்னார். உதாரணத்திற்கு பெரியாரை சொல்லியிருந்தார். இது எப்படி இந்துக்களுக்கு எதிராகவும் பிராமணர்களுக்கு எதிராகவும் அமையும். இத்தனைக்கும் சீனிவாச ராஜா அவர்கள் குங்குமம் திருநீறும் அணிந்து தான் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

Advertisement

கன்னடம் தெரிவிக்கும் மக்கள்:

அவருக்கு கடவுள் பக்தி இருப்பதை அவருடைய பேட்டியை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இப்படி இருக்கும்போது பாஜக மாநில நிர்வாகி மோதிலால் என்பவர் பேசி இருக்குபோது முற்றிலும் தவறான ஒன்று. இந்துக்களாக போராடுவதாக கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு உள்ளே கலவரத்தை ஏற்படுத்துக்கிறார். பிராமணர், இந்துக்களுக்கு இடையில் பிரச்சினை உருவாக்க தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement