நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கையால் அவரின் உயரத்தை கேலி செய்துள்ளார் பி ஜே பி ஆதரவாளர். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே நீட் தேர்வுக்கு எதிராக பலர் குரல் குடுத்து வருகின்றனர். நீட் தேர்வு என்று சொன்னதும் தமிழக மக்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது மாணவி அனிதாவின் தற்கொலை தான். நீட் தேர்வால் மருத்துவ சீட்டு கிடைக்காமல் அனிதா துவங்கி கடந்த ஆண்டு வரை பல மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா, நேற்று (ஜூன் 19) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில்,அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில் தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது.எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40% மற்றும் 25% மாணவர்களில் 20 சதவீத மாணவர்களே உயர்கல்விக்கு செல்கின்றனர்.

Advertisement

தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளி கல்வி படித்த பிறகும் நுழைவு தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வி தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி. நீட் நுழைவுத் தேர்வு வைக்கப்படும் மூலம் அவர்களை நீர் நுழைவுத் தேர்வு வைக்கப்படுவதன் மூலம் மருத்துவர்கள் வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது.

மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும்நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை. தமிழக அரசு நியமித்த நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும் படி கேட்டிருக்கிறது. கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மனித உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே, நிரந்தரத் தீர்வு. கல்வி மாநில உரிமை என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement

சூர்யாவின் இந்த அறிக்கையை கேலி செய்துள்ள பி ஜே பி ஆதரவாளரான, லக்ஷ்மன் நாராயணன் என்பவர், சும்மா பேருக்கு மாஸ் கம்யூனிகேஷன்னு கோர்ஸ் படித்துவிட்டு , நீட் பத்தி எல்லாம் பேசக்கூடாது . சமூகநீதிக்கு முதல்ல அர்த்தம் தெரியுமா நாலடியான்களுக்கு? என்று சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement
Advertisement