அஜித்தின் படங்கள் பிடிக்காமல் போகலாம். ஆனா இந்த விஷயத்துல அவருக்கு இணையா எந்த ஸ்டாரும் இல்ல - ப்ளூ சட்டை அதிரடி பல்டி

By Arun · 22/8/2023

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ வைரலான நிலையில் ரஜினியை மீண்டும் கேலி செய்து வருகிறார் ப்ளூ சட்டை. அண்ணத்த படத்தின் போது ப்ளூ சட்டை மாறன் படத்தை மட்டுமல்லாது ரஜினியையும் படு மோசமாக விமர்சித்து இருந்தார். அப்போது இருந்து இவருக்கு ரஜினி ரசிகர்களுக்கும் ட்விட்டரில் அடிக்கடி கமண்ட் போர் சென்று கொண்டு தான் இருக்கிறது. இது இறுதியில் கொலை மிரட்டல் வரை சென்றது.

ஆனாலும், ரஜினியை இவர் விமர்சித்து வருவதை விட்ட பாடில்லை. இப்படி ஒரு நிலையில் ரஜினி உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த வீடியோவை பகிர்ந்து தொடர்ந்து கேலி செய்து வருகிறார். ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது. இந்த படம் 500 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார்.

அங்கு அவர் ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்று இருக்கிறார். பின் ரஜினிகாந்த் அங்கு மாநில ஆளுநரை சந்தித்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து ஆசிரமத்திற்கு சென்று இருந்தார். ஆசிரமத்தில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ சென்றிருந்தார். அப்போது ரஜினிகாந்தை பார்த்த செய்தியாளர்கள் பேட்டி எடுத்துஎடுத்தனர்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறேன். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம் கடவுளின் ஆசிர்வாதம் என்று பேசி இருந்தார். ஆனால், ஜெயிலர் படத்தை பார்த்த ஆதி ஆதித்யநாத் வரவில்லை. இருப்பினும் உ.பி துணை முதல்வருடன் படம் பார்த்தார் ரஜினி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் யோகி ஒரு ஆன்மீக வாதி அதனால் தான் ரஜினி அவரது காலில் விழுந்தார் அதில் என்ன தவறு என்று கூறி வந்தனர். மேலும், சிலரோ ரஜினிக்கு வயது 72, யோகிக்கு வயது 51 தான். இப்படி வயதில் சிறியவர் காலில் விழலாமா என்று விமர்சித்து வந்தனர்.

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர் பக்கம் ஒன்று நடிகர் அஜித், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் காலில் விழும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ' நீங்களாவது காலதான் புடிச்சீங்க, எங்க தல எத பிடிக்கிறார் பாத்தீங்களா ' என்று கேலியாக பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த ப்ளூ சட்டை மாறன் 'அமிதாப் கலைத்துறையில் சீனியர், வயதில் பெரியவர், அஜித்தை வைத்து உல்லாசம் படமெடுத்த தயாரிப்பாளர். அந்த மரியாதைக்கு காலில் விழுந்து வணங்குகிறார்.

இதப்போயி கபாலி மேட்டரோட மேட்ச் பண்ணாதீங்க.அஜித்தின் படங்கள் பிடிக்காமல் போகலாம். ஆனா தனிமனித ஒழுக்கத்துல அவருக்கு இணையான ஒரு முன்னணி ஸ்டார் இங்க கிடையாது.கருப்பு பணத்தை பதுக்கறவங்களுக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா.. நேர்மையா வரி கட்டுற இவருக்கு எவ்வளவு இருக்கும்? எனவே, இது போன்ற விஷயத்தில் அஜித்தை தொடும் முன் கொஞ்சம் யோசியுங்க' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full