வெற்றிவிழாவுக்கு ஆதார் கார்ட் கட்டாயமா, படம் சக்ஸஸ் ஆனதுக்கான ஆதாரத்தையும் கேளுங்க சார் - லியோ வெற்றி விழாவை வச்சி செய்யும் ப்ளூ சட்டை

By subhashini · 1/11/2023

லியோ படத்தின் வெற்றி விழாவை கிண்டல் செய்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார்.

https://twitter.com/tamiltalkies/status/1719591703802528118

இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் புலம்பி கொட்டுகின்றனர். அந்த வகையில் விஜய்யின் லியோ படம் உருவான நாளில் இருந்தே ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வருகிறார். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

லியோ படம்:

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், படத்தில் விஜய் அன்பான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் மான்ஸ்டர் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். லியோ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. உலக அளவில் முதல் நாளில் இந்த படம் 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

https://twitter.com/tamiltalkies/status/1719272364599623980

லியோ வசூல்:

லியோ படம் ஏழு நாட்களிலேயே 478 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆக மொத்தம் படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் லியோ வெற்றியை சிறப்பாக கொண்டாட செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்துகிறார்கள். இதற்கு முதலில் அனுமதி கேட்டு காவல்துறையிடம் தயாரிப்பு நிறுவனம் கடிதம் அளித்து இருந்தது. பின் நேரு உள்விளையாட்டு அரங்கு பராமரிப்பாளர்களிடமும் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தார்கள்.

https://twitter.com/tamiltalkies/status/1719387695955562696

லியோ வெற்றி விழா:

அவர்கள் அந்த கடிதத்தை நிராகரித்து ஈமெயிலில் அனுப்புமாறு அறிவுறுத்தி இருந்தார்கள். பின் மீண்டும் அனுமதி கடிதத்தை இமெயில் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. ஏற்கனவே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணமாகத்தான் விழாவை நிறுத்தி விட்டார்கள். தற்போது பல பிரச்சனைகளுக்கு பின் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட இருக்கிறது. மேலும், இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்ள இருப்பதால் போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

ப்ளூ சட்டைமாறன் விமர்சனம்:

விழாவிற்கு வருபவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்றும் விழாவிற்கான பாஸ் இருந்தால் மட்டும் தான் உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், படம் வெற்றி பெற்றதற்கான ஆதாரத்தையும் கேளுங்கள் என்று கிண்டல் செய்து இருக்கிறார். இதற்கு முன்பே ப்ளூ சட்டை மாறன் ஓடாத படத்துக்கு சக்ஸஸ் மீட் வக்கிறது. இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல‌. ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம் என்று கூறி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டைமாறனைவறுத்து எடுத்து வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full