உங்க பேரனையாவது விட்டு வையுங்க - ரோபோ ஷங்கரின் குடும்பத்தையே வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்
நடிகர் ரோபோ சங்கரை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர்.
அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின் விஜய் டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் சினிமா உலகில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார்.
ரோபோ சங்கர் திரைப்பயணம்:
இதற்கிடையில் இவர் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு மிக மோசமாக நிலையில் இருந்தார். அதற்கு பின் சிகிச்சை எடுத்து தேறி மீண்டும் ரோபோ சங்கர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவருடைய மகள் இந்திரஜா அவர்கள் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்திராஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக இந்திராஜா சோசியல் மீடியாவில் பதிவு போட்டிருந்தார். அதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
சோசியல் மீடியாவில் ரோபோ சங்கர் குடும்பம்:
தற்போது ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் அம்பி படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு நிகழ்வு என்றாலும் அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு இந்திரஜா அதிகமாக சோசியல் மீடியாவில் தான் இருக்கிறார். இவர் தன்னுடைய ஒவ்வொரு செயல்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். குழந்தை பிறந்த பிறகும் தன்னுடைய மகன் தொடர்பான வீடியோக்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு:
இதை சிலர் வரவேற்றாலும், சிலர் ட்ரோல் செய்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், போதும் ரோபோ சங்கர். உங்க இம்சை தாங்கல. கதறும் மக்கள். விஜய் டிவியில் மிமிக்ரி செய்து பெயர் வாங்கினார் ரோபோ சங்கர். ஆனால் தனித்துவமாக காமடி செய்ய தெரியாதவர். தப்புதப்பாக ஆங்கிலம் பேசுவது போல் நடிப்பதே காமடி என நம்பி பல படங்களில் மொக்கை போட்டார். காலைல கோழி கூவுற காமடி ஒன்றுதான் இவருக்கான ஒரே அடையாளம். இவரது காமடி எடுபடாததால் சிவகார்த்திகேயன் இவரை கழற்றி விட்டார்.
அதன்பிறகு யூட்யூப் சேனல்கள் இவரை மொத்தமாக லீசுக்கு எடுத்து விட்டன.
போதும் ரோபோ சங்கர். உங்க இம்சை தாங்கல. கதறும் மக்கள்:
— Blue Sattai Maran (@tamiltalkies) May 12, 2025
* விஜய் டிவியில் மிமிக்ரி செய்து பெயர் வாங்கினார் ரோபோ சங்கர். ஆனால் தனித்துவமாக காமடி செய்ய தெரியாதவர்.
* தப்புதப்பாக ஆங்கிலம் பேசுவது போல் நடிப்பதே காமடி என நம்பி பல படங்களில் மொக்கை போட்டார்.
* காலைல கோழி கூவுற காமடி… pic.twitter.com/nAe8v7Ar1P
ரோபோ சங்கர் விமர்சனம்:
மருமகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அனைத்து வீடியோக்களிலும் தோன்றினர். கல்யாணம், வளைகாப்பு, ஷாப்பிங் என 24 மணிநேரமும் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவாக போட்டு அறுக்கிறார்கள். எந்த புதுப்படம் வந்தாலும் அதன் செலப்ரிட்டி ஷோவுக்கு மொத்த குடும்பத்துடன் ஆஜராகி விடுகிறார். தற்போதுஇவர் தாத்தா ஆன பிறகும், இவரது பேரனை வைத்து வீடியோ போடுகிறார்கள்.
ஒவ்வொரு வீடியோவுக்கும் கணிசமான தொகை பெறுவதாக கூறப்படுகிறது. பணம் வருகிறது என்பதற்காக 24 மணி நேரமும் உங்கள் குடும்பத்தின் சாதாரண நிகழ்வகளை கூட வீடியோவாக காட்டுவது கூச்சமாக இல்லையா? தயவு செய்து உங்கள் பேரனையாவது இந்த போலி வெளிச்சத்தில் இருந்து விலக்கி வையுங்கள்.
செலப்ரிட்டி எனும் பெயரில் உங்களை பீடித்துள்ள இந்த பப்ளிசிட்டி மோகம் எரிச்சலை மட்டுமே தருவதாக பலர் கூறுகிறார்கள். தாத்தா ஆனபிறகும் திருந்தாவிட்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கூறி இருக்கிறார்.