ப்ளூ சட்டையின் 'ஆன்டி இந்தியன்' இந்த படத்தின் காப்பியா ? வைரலாகும் அந்த படத்தின் வீடியோ. (நீங்களே ஒரு முடிவ சொல்லுங்க)
சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் 'ப்ளூ சட்டை மாறன்' இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
https://twitter.com/jagadesh2907/status/1469158887701958658
இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார்.
இப்படி ஒரு நிலையில் இவர் முதல் முதலாக படம் ஒன்றை இயக்கி நடித்து இருக்கிறார். மேலும், இவர் படத்தை வைத்து செய்வதற்கென்றே பல நடிகர்களும் இயக்குனர்களும், ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவரின் ஆன்டி இண்டியன் படத்தின் முதல் பார்வை வெளியாகி இருக்கிறது. வாங்க போய் பார்க்கலாம். சீன் ஓப்பனிங்கில் அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரங்கள், ஓவியங்கள் வரைபடத்தில் நம்ம ஹீரோ மாறனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ஹீரோ மாறன் படத்தில் பாட்சா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறப்பவர் தான் பாட்சா. பின்னர் இவரது உடலை வைத்து நடக்கும் அரசியல் வேலைகளே இந்த படத்தின் கதை.
பல படங்களை குறை சொன்ன ப்ளூ சட்டை மாறன் இயக்கிய படம் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா என்றால் கண்டிப்பாக இல்லை என்று சொல்லலாம். படத்தின் ஹீரோவான ப்ளூ சட்டை மாறன் படம் முழுக்க பிணமாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் முதல் பாதியில் இருந்த கொஞ்ச வேகம் இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை.
https://twitter.com/Raana_official2/status/1468840148192219139
முதல் பாதியில் கொஞ்சம் வசனங்கள், காட்சிகள் இருந்தாலும் பிற்பாதியில் கதையை எதை நோக்கி செல்கிறது? இது படம் தானா? என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு இயக்கியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அதேபோல் சில இடங்களில் வரும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு தேவையா? என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. கிளைமாக்ஸ் வரை திரைக்கதையை கொண்டு செல்ல இயக்குனர் பயங்கர போராடிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
https://twitter.com/RajiniBalu13/status/1468830687813718017
இருப்பினும் இந்த படத்திற்கு வரும் விமர்சனங்கள் அனைத்தையும் நான் ஏற்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படம் இந்தியில் வெளியான 'DekhTamashaDekh' என்ற படத்தின் காபி என்று புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர். மேலும், அந்த படத்தின் ட்ரைலரை ஒப்பிட்டு 'ஆன்டி இந்தியன்' படத்தை பலரும் கலாய்த்து வருகின்றனர்.