இப்படியெல்லாம் அவர் பாடலாமா? அயலான் விமர்சனத்தில் கூட இமான் பஞ்சாயத்தை இழுத்த ப்ளூ சட்டை.

By subhashini · 14/1/2024

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அயலான். இந்தப் படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். பல சிரமங்களுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து சில தினங்களுக்கு முன் இந்த படம் வெளியாகி இருக்கிறது.
ஏலியன் ஜானரில் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

வேற்று கிரகத்தில் உள்ள கல் ஒன்று பூமியில் விழுகிறது. அது வில்லன் கையில் கிடைக்கிறது. அவன் மைனிங் செய்து பூமியை ஓட்டை போட்டு சில ஆயுதங்களைத் தேட முயற்சிக்கிறார். அப்போது அதில் இருந்து வெளிவந்த நச்சு வாயால் நிறைய மக்கள் இருக்கிறார்கள். இந்த விஷயம் ஏலியனுக்கு தெரிகிறது. பின் ஏலியன், பூமி முக்கியம். அதைக் காப்பாற்ற வேண்டும் என்று ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது. அந்த ஏலியன் ஹீரோ சிவகார்த்திகேயனிடம் செல்கிறது.

அயலான் படம்:

சிவகார்த்திகேயன் மற்றும் அந்த ஏலியன் இருவரும் இணைந்து சென்னையை காப்பாற்றினார்களா? அந்த வில்லனை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்களா? பூமிக்கு வந்த அந்த கல்லால் மக்களுக்கு நல்லது நடக்கிறதா? என்பதே படத்தின் மீதி கதை. குழந்தைகள் கொண்டாடும் விதமாக இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடைய நடிப்பும், சிஜி ஒர்க் எல்லாம் நன்றாக இருக்கிறது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

ப்ளூ சட்டை மாறன் வீடியோ:

பிரபலங்கள் பலருமை இந்த படத்தை பார்த்து பாராட்டியிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வழக்கம் போல் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அப்போது ப்ளூ சட்டை மாறன், எல்லா படங்களிலும் ஹீரோக்களுக்கு என்று தத்துவ பாடல் இருக்கும். அந்த வகையில் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் வேற லெவல் என்ற பாடல் இருக்கும். அதில் தப்பு பண்ணினா பரவாயில்ல, கண்ணியமா நிப்பேன் என்று ஒரு வார்த்தை வரும். இது எதற்கு என்று மறைமுகமாக இமான் விஷயத்தை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பேசி இருக்கிறார்.

இமான்-சிவகார்த்திகேயன் சர்ச்சை:

கடந்த ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் டி இமான், மனம் கொத்தி பறவை படத்தில் தான் சிவகார்த்திகேயன் உடன் பயணம் ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது என்று கூறி இருந்தார்.

https://twitter.com/karthik77390560/status/1746520925024235809?s=48

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

இப்படி டி.இமான் வெளிப்படையாக பேசி இருந்தது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன், ‘CSK எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் – இமான் பேட்டி. ‘CSK என்றால் Cringe Sivakarthkeyan. உங்கள் சந்தேகங்கள் தீர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், கணவன் மனைவி இடையே கோள்மூட்டு விட்டு குடும்பத்தை பிரித்த CSKவின் செயல் சரியானது, கேவலமானது என்று வாக்கெடுப்பை எல்லாம் நடத்தி இருந்தார். தற்போது மீண்டும் இவர் அயலான் பாடல் மூலம் இமான் விவகாரத்தை கொளுத்தி போட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full