கமலா தியேட்டர் இல்ல மாயாஜாலுக்கு வரேன் - மிரட்டல் விட்ட ரஜினி ரசிகர்களுக்கு ப்ளூ சட்டை சவால்.

By Rajkumar · 10/8/2023

தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ப்ளூ சட்டை மாறன் போலீஸில் கொடுத்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ரஜினி ரசிகர்களுக்கு சவால் விட்டுள்ளார் ப்ளூ சட்டை . விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.

நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. ஆனால், இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இவர் விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார்.

இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன. அந்த வகையில் இவர் ரஜினியை அடிக்கடி வம்பிழுத்து வருகிறார். அதிலும் அண்ணத்த படத்தின் போது இவர் படத்தை மட்டுமல்லாது ரஜினியையும் படு மோசமாக விமர்சித்து இருந்தார். அப்போது இருந்து இவருக்கு ரஜினி ரசிகர்களுக்கும் ட்விட்டரில் அடிக்கடி கமண்ட் போர் சென்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த சண்டை கொலை மிரட்டல் வரை சென்றுள்ளது.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தையும் ரஜினியையும் அடிக்கடி விமர்சித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய விஷயங்களை கூட கேலி செய்து தொடர்ந்து ட்வீட் போட்டு ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தார்.

இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர்கள் சிலர் ட்விட்டர் குரூப் காலில் 'ப்ளூ சட்டை மாறன் கமலா தியேட்டரில் படம் பார்க்க வர இருகிறார். தலைவர் ரசிகர்கள் அனைவரும் இதை நோட் பண்ணிக்கோங்க என்று கூற அதற்கு இன்னோரு நபர் 12 மணிக்கு அவர் வந்தால் என்ன செய்ய போறீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் 'இந்தமுறை சரியாக ஸ்கெட்ச் போட்டு தூக்கனும் கிங்ஸ்லீ. CCTV இருந்தாலும் பயப்பட கூடாது' என பேசிய நபரை உடனே கைது செய்ய வேண்டும். இதர நபர்களையும் வன்முறைக்கு தூண்டி விடுகிறார்.

இந்த ஆடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன் 'எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இந்த நபர் மீதும் இது போன்ற வன்முறையை தூண்டும் நிர்வாகி மீதும் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார் அவர்களும் கொலை மிரட்டல் விடும் இவர் மீது நடவடிக்கை எடுத்து சட்ட எடுத்து சட்ட ஒழுங்கை காப்பாற்றுவார் என்று நம்புகிறேன் என்றும் பதிவிட்டு இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர்களின் இந்த மிரட்டலுக்கு சவால் விட்டுள்ள ப்ளூ சட்டை 'டேய்.. நான் மாயாஜால்னு தெளிவாத்தான சொன்னேன். இப்ப எதுக்கு சம்மந்தமே இல்லாம கமலா தியேட்டர்னு பொய் சொல்லி.. சும்மா இருக்கற பசங்களையும் ரேக்கி விட்டுட்டு இருக்க? அதாவது நீ கமலா தியேட்டர்ல போய் 'ப்ளூ சட்டை இங்க வரவே இல்லை. பயந்துட்டான்'னு ட்வீட் போட்டு ஊரை ஏமாத்தத்தான இப்படி ஒரு மொக்கையான ப்ளான் போட்ட? ஏன்டா இப்படி LKG பசங்க ரேஞ்சுக்கு இருக்கீங்க?' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full