யோவ் பிஸ்தா பருப்பு, போடுறது சாமியார் கெட்டப் பேசறது எல்லாம் சனாதனம், ஹிந்தி - பவன் கல்யாணை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்

By ·

பவன் கல்யாண் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பவன் கல்யாண். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தனது நேர்மையான நடிப்பிற்கும் துணிச்சலான ஆளுமைக்கும் காரணமாக எண்ணற்ற ரசிகர்களை கொண்டு இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

தற்போது இவர் ஹரி ஹர வீரமல்லு என்ற படத்தை நடித்திருக்கிறார். இந்த படத்தை ராதா கிருஷ்ணா ஜகர்லமுடி என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவருவதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பவன் கல்யாண் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் ஜன சேனா கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் ஆந்திராவின் துணை முதல்வராக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தமிழர்களை விமர்சித்து பவன் கல்யாண் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பவன் கல்யாண் வீடியோ:

அதாவது, ஜனசேனா கட்சியின் உடைய 12 வது விழா நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நம்முடைய நாட்டில் இரண்டு மொழிகள் மட்டுமல்ல தமிழ் உட்பட பல மொழிகள் இருக்கு. மொழியில் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நம்முடைய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மட்டும் இல்லாமல் மக்கள் இடையே அன்பையும் ஒற்றுமையும் வழங்க்கும். இந்தியாவில் பல மொழிகள் இருப்பது நல்லது தான். சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள்? என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ் மக்கள் பற்றி சொன்னது:

அதேபோல் தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்? என்பதும் தெரியவில்லை. அவர்கள் தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள். பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் மட்டும் தேவை. ஆனால், அவர்களுக்கு இந்தி தேவையில்லை. இது என்ன லாஜிக்? முதலில் உங்கள் படங்களை இந்தியில் டப் செய்வதை நிறுத்துங்கள். வடக்கிலிருந்து டெக்னீசியனைகளை இங்கு கொண்டு வராதீர்கள். இந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா? என்று ஆவேசமாக பேசி இருக்கிறார். தற்போது இவர் பேசியிருக்கும் விஷயம் தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதற்கு தமிழர்கள் பலருமே கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

இந்த நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கட்சி ஆரம்பித்த காலத்தில் சேகுவேராவின் முகமூடியை மாட்டிக்கொண்டு வந்தவர்தான் இந்த பிஸ்தா பருப்பு.
சீமானுக்கு பிரபாகரன், விஜய்க்கு பெரியார, அம்பேத்கர், பிரசாந்த் கிஷோருக்கு காந்தி, அம்பேத்கர்.
பாஜகவின் ஆட்கள் எனக்கூறி வந்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் ஆளுக்கொரு முகமூடி. அந்த கடைசி வரியை கவனித்தீர்களா? இவர்களின் நோக்கம் மும்மொழியல்ல. ஹிந்தி, சமஸ்கிருதம் எனும் இருமொழிக்கொள்கை மட்டும்தான்.

பவன் கல்யாண் விமர்சனம்:

தமிழ்ப்படங்களை ஏன் ஹிந்தியில் டப் செய்கிறீர்கள் என்கிறார். ஹிந்தி மீது அவ்வளவு பாசம் இருந்தால்.. நீங்கள் ஹிந்தி மொழியில் மட்டும் ஒரு படம் நடித்து, அதை சமஸ்கிருதத்தில் டப் செய்து ஹிட்டாக்க முடியுமா? உங்கள் எதிர்ப்பை காண்பிக்க Hari Hara Veera Mallu படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய மாட்டேன். தமிழில் டப் செய்து OTT/TV யில் வெளியிட மாட்டேன் என சொல்லுங்கள் பார்க்கலாம்? வியாபாரத்தையும், கல்வியையும் முடிச்சு‌போட்டு பேசும் ஞானப்பழமே. போடுறது சாமியார் கெட்டப். பேசறது எல்லாம் சனாதனம், லட்டு, ஹிந்தி, சமஸ்கிருதம். பிற மதத்தினர் மற்றும் சனாதனத்தை‌ ஏற்காத இந்துக்கள் என் படத்தை பார்க்க வர வேண்டாம்னு சொல்ல மட்டும் வாய் வராது. பட வசூலுக்கு எல்லாரும் தேவை. யோவ்.. பிஸ்தா பருப்பு என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை