எதுக்கு இந்தியாவிலேயே முதல் முறை, உலகத்தில் முதன் முறை எல்லாம் - இரவின் நிழல் படத்தை நொட்டம் சொன்ன ப்ளூ சட்டை மாறன்.

By subhashini · 16/7/2022

இரவின் நிழல் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். அகிரா புரோடக்சன் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இரவின் நிழல் படம்:

படத்தில் நந்து என்பவர் சினிமா பைனான்சியர். இவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவரை போலீசார் கைது செய்ய துரத்தி வருகின்றனர். போலீசில் சிக்காமல் தன்னை காத்து கொள்ள போலி சாமியார் ரோபோ சங்கரின் உதவியை நாடுகிறார். அங்கே என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது ? எல்லாம் முடிந்து மீதமிருக்கும் எதிரிகளை முடித்து தள்ள முடிவு எடுக்கும் தருணத்தில் கடந்த கால வாழ்க்கையை எண்ணிப் பார்க்கத் தொடங்குகிறார் நந்து.

இரவின் நிழல் படத்தின் கதை:

நந்துவின் வாழ்வில் நந்துவாக பலர் வந்து போகிறார்கள். நந்துவின் வாழ்க்கையில் வரும் பெண்கள் செய்யும் நல்லது, கெட்டது. கடைசியில் நந்துக்கு என்ன நடக்கிறது? என்பது தான் படத்தின் மீதி கதை. ஏற்கனவே இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வருகின்றது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் குவிந்து முயற்சியை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இரவின் நிழல் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

அதில் அவர் கூறியிருந்தது, படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். படத்திற்கு முன்பு மேக்கிங் வீடியோ என்று அரை மணிநேரம் காண்பித்திருக்கிறார்கள். அதில் பார்த்திபன் மற்றும் கலைஞர்கள் பட்ட கஷ்டம் தெரிகிறது. ஆனால், படத்தை எடுக்க இவ்வளவு மெனக்கெட்டவர்கள் கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். நம்ம ரசிகர்களுக்கு பொருத்தவரை கதை எப்படி இருப்பது என்று தான் பார்ப்பார்கள். படம் முதல் ஷாட்டா? நான்லீனியரா? ஒன்னும் பார்க்க மாட்டார்கள். ஒரு இயக்குனருக்கு தேவையானதும் கதை தான்.

https://youtu.be/jRf4uGjwPZM

இரவின் நிழல் படம் குறித்து சொன்னது:

அதுமட்டுமில்லாமல் இது முதல் ஒரே ஷார்ட் பிலிம் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே போல் நிறைய மொழிகளில் எடுத்து இருக்கிறார்கள். அதோடு பார்த்திபன் இதை உலகிலேயே நான்லீனியர் படம் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே 2013 இல் ஈரானில் fish & cat என்ற படம் வந்து விட்டது. அதனால் இதை உலகிலேயே, தமிழகத்திலேயே, சினிமாவிலேயே என்று சொல்வதெல்லாம் தேவையில்லாத ஒன்று. ஒரு இயக்குனர் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால் போதும். அதற்கு இந்த மாதிரி எல்லாம் சொல்வது அர்த்தமற்ற ஒன்று என்று படம் குறித்தும் பார்த்திபன் குறித்தும் ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full