ஏலே பேதில போவான், பெரிய மனுஷன்னு பாக்கேன் - கர்ணன் படத்தை விமர்சித்த மாறனை வெளுத்து வாங்கிய ஜி பி முத்து.

By Rajkumar · 23/4/2021

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் நேற்று (ஏப்ரல் 9) வெளியாகியது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

https://www.youtube.com/watch?v=1e5eMwChuzw

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : இரண்டாம் திருமணத்திற்கு பின் கையில் விஷ்ணு விஷால் குதியுள்ள டாட்டூ - ஆனா, இது ஜவாளா பேர் இல்லையே.

சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்தார். வழக்கம் போல இந்த படமும் ஒரு சுமாரான படம் தான் என்று கூறியிருந்தார் மாறன்.

https://www.youtube.com/watch?v=iFefeckKyYI&feature=youtu.be

பலரும் கொண்டாடி வரும் இந்த படத்தை மாறன் இப்படி விமர்சனம் செய்தது பலரால் விமர்சிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு, ப்ளூ சட்டை மாறன் அந்த படத்திற்கு சொன்ன விமர்சனம் பற்றி பிரபல டிக் டாக் கலைஞசரான ஜி பி முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவ்வளவு நல்ல படத்தை சுமாரான படம் என்று சொல்லும் ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுத்துள்ளார் ஜி பி முத்து.

Tamil Behind Talkies AMP · Quick view
View full