சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

அதோடு இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. பின் மீண்டும் இவர் தனது விமர்சன பணியை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்த போது அஜித்தை உருவக் கேலி செய்து இருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் பாருங்க : விருது வாங்கிய அனிருத் – வீடியோவிற்கு கீழ் கமன்ட்டில் குவியும் ஜி வி பிரகாஷ்ஷின் பெயர். (ரசிகர்களின் ஆதங்கம்)

Advertisement

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை விமர்சனம் செய்து இருந்தார் மாறன். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக்

இது இந்தியில் வெளிவந்த ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் படம் என்றாலும் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். இருப்பினும் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு பல விமர்சகள் தங்கள் விமர்சனங்களை போட்டு இருந்தாலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்ததது ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் தான். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் மாறன்.

Advertisement

ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் :

அதில் இந்த படத்தில் பொறுக்கிக்கும் ஒரே நீதி, போராளிக்கும் ஒரே நீதி என்பது வழங்கப்பட்டுள்ளது.ஒரிஜினல் படம் ஆன ஆர்டிகள் 15 படத்தில் இருந்து இப்படம் அரை கிலோமீட்டர் தள்ளி உள்ளது.உதயநிதி போலீஸ் வேடத்தில் ஓரளவு நல்லா நடித்துள்ளார். மொத்தத்தில் இப்படம்,ஒரிஜினல் கதையான ஆர்டிகள் 15 படத்தினை பார்க்காமல் இதனை பார்த்தால் ஒரு வித்தியாசமான திருப்தி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

மாறன் விமர்சனத்தில் இருந்த மாற்றம் :

பொதுவாக ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் என்றால் படத்தை விமர்சிப்பதோடு படத்தில் நடித்த நடிகர், நடிகைகளை விமர்சிக்காமல் இருந்தது இல்லை. ஆனால், நெஞ்சுக்கு நீதி படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த எந்த நடிகர்களை பற்றியும் எந்த குறையும் சொல்லவில்லை. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆளுங்கட்சி என்பதால் தான் மாறன் இப்படி அடக்கி வாசித்துள்ளார் என்றும்.

கேலி செய்யும் ரசிகர்கள் :

இந்த விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் அடக்கி வாசித்து இருப்பதாகவும் கூறி வருகின்றனர். மேலும் இதுவே ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா என்று மற்ற எல்லாரையும் பாடி ஷெமிங் பண்ணி நடிப்பு, டான்ஸ், ஸ்க்ரீன் பிரசன்ஸ் நல்லா இருந்தாலும் நொட்டம் மட்டும் சொல்லுவான். ஆனா உதயநிதி போலீஸ் கேரக்டர்ல நல்லா நடிச்சி இருக்கானாம் என்று பதிவிட்டு ப்ளூ சட்டை மாறனை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement