'காலைல 4 மணிக்கு குளிச்சிட்டு கத கேப்பார்'அஸ்வின் சர்ச்சை பேச்சுக்கு பிரபல நடிகரின் கதை கேட்கும் பழக்கத்தை உதாரணம் சொன்ன ப்ளூ சட்டை.

By Arun · 9/12/2021

தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் என்ன பேசுகிறோம் என்பதே பேச தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வரும் அஸ்வின் பற்றி ப்ளூ சட்டை மாறன் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமானார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர்., தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=NNOa0gTBzMY

தற்போது இவர் 'என்ன சொல்லப்போகிறாய்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பேசிய அவர், னக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன் என்று இவர் பேசிய பேச்சால் இவரை நெட்டிசன்கள் கடந்த இரன்டு நாட்களாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : தன் காதலியை இரண்டாம் திருமணம் செய்து விட்டாரா நவீன் ? குடும்பத்துடன் வெளியான புகைப்படங்கள்.

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த அஸ்வின், தன் முதல் படம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாவும், யாரையும் குறை சொல்ல அப்படி பேசவில்லை என்றும் கூறி இருந்தார். அஸ்வினின் இந்த பேச்சை பல சினிமா பிரபலங்களும் விமர்சகர்களும் விமரித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இடம் அஸ்வின் பேசிய இந்த சர்ச்சை கருத்து குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மாறன் அவர் அப்படி படுத்து தூங்கினால் பெரிய நடிகராக வந்துவிடுவார் அதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் அதற்கென்று ஒரு நேரம் ஒதுக்கி அவர் கேட்பது நல்லது என்று சொன்ன மாறன் பி வாசு என் டி ராமாவிற்கு கதை சொன்ன போது நடந்த சம்பவம் ஒன்றை கூறி இறுதியில் இதெல்லாம் எங்க போய் தொலையுது பாப்போம் என்று தன்னுடைய ஸ்டைலில் பங்கம் செய்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full