கறி வாங்க காசு இல்லாதவன் கருவாட கண்டுபிடிச்சான், கதை எழுத துப்பில்லாதவன் தான் இத எழுதி இருக்கணும் - ப்ளூ சட்டை மாறன்
ரஜினியின் கூலி படத்தை ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது உருவாகி இருக்கும் படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கூலி படத்தை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூலி படம்:
அதில் அவர், ஒரு வழக்கமான பழிவாங்கல் கதையை தான் லோகேஷ் எடுத்திருக்கிறார். தலைவர் ரஜினி ஃபேன் இந்தியா படம் எடுக்கணும்னு இந்தியாவில் பிற மொழிகளில் இருக்கும் பிரபல நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைத்து பேன் இந்தியா படம்னு சொல்றார். பொதுவாகவே லோகேஷ் படம் என்றால் கொலை, கஞ்சா, பவுடர், கதையை தான் எடுப்பார். ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக வாட்ச் கடத்தல் கதையை எடுத்து இருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:
எல்லா நடிகர்களையும் கொண்டு வந்து லோகேஷ் இடம் தலைவர் கதை எழுத சொல்லி இருக்கிறார். இது எப்படி இருக்குன்னா, கறி வாங்க காசு இல்லாத ஏதோ ஒரு பையன் தான் கருவாடு கண்டுபிடித்தான். அந்த மாதிரி கதை எழுத துப்பில்லாதவன் தான் இந்த கதையை எழுதி இருக்கணும். காட்டு மொக்கையாக கதை இருக்கு. படத்தில் வில்லனாக நாகர்ஜுனா வருகிறார். அவருக்காவது ஸ்கோப் இருக்குமான்னு பார்த்தா வில்லனையும் பாதி பாதியாக பிரித்து இருக்கிறார்கள்.
https://youtu.be/C3SNSiCIfwM?si=tLfoiqg2N1c-sBLw
படம் பற்றி சொன்னது:
சௌபின் நடிப்பு ஓகே. இந்த படத்தில் உபேந்திரா, அமீர்கான் கேமியோ ரோலில் வந்து இருக்கிறார்கள். அமீர்கான் பீடி பிடிப்பது தவிர வேறு ஒன்றுமே செய்யவில்லை. பீடி விளம்பரத்திற்கு அவரை அனுப்பி இருக்கலாம். அதோடு சில படங்களை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் பார்த்தீங்கனா ஒரு சுமாரான படமாக இருக்கும். ஆனால், இந்த படம் காட்டு மொக்கைன்னு ஊரெல்லாம் பரவி விட்டது. நீங்க ஒரு காட்டு மொக்க படம் என்று நினைத்துப் பார்க்கப் போனாலும் அதைவிட இந்த படம் மொக்கையா தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
கூலி படத்தின் கதை:
படத்தில் வில்லன் நாகார்ஜுனா விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தன்னுடைய ஆட்களை வைத்து தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். நாகர்ஜுனாவிற்கு வலது கையாக தான் சௌபின் இருக்கிறார். இவர் போலீசுக்கு தகவல் சொல்பவர்களை எல்லாம் கொன்று அந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார்.
இதற்கிடையில் ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜ் இறந்த செய்தி வருகிறது. அப்போதுதான் தன்னுடைய நண்பனின் சாவில் மர்மம் இருப்பதை ரஜினிகாந்த் கண்டுபிடிக்கிறார். சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசனின் துணையோடு தன் நண்பன் சத்யராஜை கொண்டவர்களை கண்டுபிடிக்க ரஜினிகாந்த் முயற்சிக்கிறார். அதற்குப் பின் வில்லன் நாகர்ஜுனா இடத்திற்கே சென்று ரஜினி சந்திக்கும் சவால்கள் தான் படத்தினுடைய மீதி கதை.