விஜய்யை வம்பிழுத்த பாஜக மாநில செயலாளருக்கு, ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பதிலடி
விஜயை வம்பிழுத்த பாஜக செயலாளருக்கு, ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பதிலடி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய். இவர் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று விஜய், தன் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். இதனால் நிர்வாகிகள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் உற்சாகமடைந்து விட்டார்கள்.
அது மட்டும் இல்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்து இருந்தார். அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தனது கட்சிக் கொடியை பறக்கவிட்டு ஒத்திகை பார்த்து இருந்தார்.
விஜய் அரசியல்:
அதோடு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5000 பெயர்களை வைத்து கட்சி கொடியை ஏற்ற போலீசாருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அனுமதி தர மறுத்ததால் விஜய், 250-300 பேரை மட்டும் வைத்து கட்சி கொடியை ஏற்றி இருந்தார். கொடியை ஏற்றுவதற்கு முன் உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருந்தார்.
Waited till 7 pm to tweet this, hoping sense will prevail and a nuetral face will be projected by @actorvijay New political party. Same old strategy. Appeasement of minorities. Opportunistic Hindu. Stooping so low already to the extent of copying @arivalayam style of not wishing…
— Vinoj P Selvam (@VinojBJP) September 7, 2024
மாநாடு குறித்த தகவல்:
அந்த கொடியில் வாகை மலரும், இரு பக்கங்களில் யானை படமும் இடம்பெற்று இருக்கிறது. பின் மேடையில் விஜய், இதை நான் கட்சிக் கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழகத்தின் வருங்கால தலைமுறைக்கான கொடியாகவும் பார்க்கிறேன். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று பேசியிருந்தார். அவனைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த கட்சியின் சார்பில் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
வினோஜ் செல்வம் சொன்னது:
இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் தான் விஜய் நடித்து வெளியாகியிருந்த 'கோட்' திரைப்படம் உலக அளவில் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம், நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில், புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுவார் என இரவு 7 மணி வரை காத்திருந்தேன். ஆனால், அவர் சொல்லவில்லை. சிறுபான்மையினரை குஷிபடுத்தும் அதே பழைய தந்திரம். திமுகவை காப்பியடிக்கும் அளவுக்கு தாழ்ந்து போய் இருக்கிறார். இப்போதே விழித்துக் கொள்ளுங்கள் மக்களே' என குறிப்பிட்டு இருந்தார்.
இதே விஜய்தான சாய்பாபாவுக்கு கோவில் கட்டுனாரு. சமீபத்துல சீரடிக்கும் போயிட்டு வந்தாரு.
— Blue Sattai Maran (@tamiltalkies) September 7, 2024
மாணவர்களுக்கு ஊங்கத்தொகை நிகழ்ச்சில இவருக்கு நெத்தில பொட்டு வச்சப்ப.. அதையும் ஏத்துக்கிட்டாரு. pic.twitter.com/7elJbSkjas
ப்ளூ சட்டை மாறன் அதிரடி:
தற்போது பாஜக செயலாளருக்கு வினோஜ் செல்வத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'இதே விஜய் தானே சாய் பாபாவுக்கு கோவில் கட்டுனாரு. சமீபத்துல சீரடிக்கும் போயிட்டு வந்தாரு. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில இவருக்கு நெத்தில பொட்டு வச்சப்ப அதையும் ஏத்துக்கிட்டாரு' என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு தான் பலருக்கு கவனத்தையும் ஈர்த்துள்ளது.