கோவை போன விஜய்க்கு பாதுகாப்பு இல்லையா? வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன் - நடந்தது என்ன?

By subhashini · 26/4/2025

கோவையில் விஜய் ரோடு ஷோ சென்றதை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் மத்தியில் தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

இந்த படத்தை தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார்.

விஜய் குறித்த தகவல்:

இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் கூறி இருந்தார். அதன் பின் இவர் அம்பேத்கர் புத்தக விழாவில் கலந்து இருந்தார். அதில் இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இந்த நிலையில் இன்று விஜய் அவர்கள் கோவையில் தன்னுடைய கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து அவர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து கோவை வந்திருந்தார். மொத்தம் இரண்டு நாட்கள் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது.

கோவை பிரச்சாரம்:

இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் என மொத்தம் 7 மாவட்டங்களையும் சேர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய் அவர்கள் சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானத்தில் வந்தார். பின் இவரை உற்சாகமாக ரசிகர்களும் தொண்டர்களுமே வரவேற்றார்கள். பின் விமான நிலையத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு விஜய் ரோடு சோ நடத்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=-DD0abPzXdI

ரசிகர்கள் செய்தது:

சாலையினுடைய ரெண்டு பக்கங்களிலும் விஜய்யை பார்க்க ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் குவிந்து இருந்தது. விஜய் பார்த்தவுடன் சிரித்துக் கொண்டு கையசைத்தும் ஆரவாரம் செய்தும் இருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் சிலர் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பதறிய விஜய் பின் அவர்களுக்கு அறிவுரை சொல்லி பத்திரமாக இறங்க சொன்னார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து பலருமே, விஜய்க்கு சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

பிரச்சாரத்தின் வாகனத்தின் மீது ரசிகர்கள் ஏறி இப்படி எல்லாம் அலப்பறை செய்வதா? என விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன், கோவையில் விஜய்யின் வாகனத்தில் ஏறி கொரளி வித்தை ‌காட்டிய அணில் குஞ்சு. உங்களுக்கு பயந்துதான்டா Y பாதுகாப்பு கேட்ருக்காரு. இன்னும் என்னவெல்லாம் செய்ய போறானுங்களோ என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது

behindtalkies AMP · Quick view
View full