ரத்த சரித்திர கதைக்கு ஈயத்தை பூசி உருட்டி இருக்காரு- தங்கலான் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

By subhashini · 16/8/2024

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தான் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை இருக்கிறார். படத்தில் வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் ஹீரோ தங்கலான் முனி, தன்னுடைய மனைவி கங்கம்மா, குழந்தை மற்றும் தன்னுடைய மக்களுடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் தங்களுக்கான நிலத்தில் பயிர் செய்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்து பொறுக்காத அந்த ஊரின் உடைய மிராசு சூழ்ச்சி செய்து தங்கலானையும், அவனுடைய மக்களையும் அடிமையாக்கி தனக்கு கீழ் வேலை செய்ய வைக்கிறார்.

தங்கலான் படம் :

இதையெல்லாம் பார்த்து கொந்தளித்த தங்கலான் தன்னுடைய மக்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று போராடுகிறார். அப்போது தான் வெள்ளைக்காரன் கிளிமண்ட் மூலம் தங்கம் தேடும் வேலை தங்கலான் மக்களுக்கு கிடைக்கிறது. அதை செய்வதன் மூலம் அதிக சம்பளம் கிடைக்கும். அதை வைத்து தங்களுடைய நிலத்தை மீண்டும் வாங்கி விடலாம் என்று நினைத்து மக்களை தங்கம் தேடும் இடத்திற்கு வேலைக்காக தங்கலான் அழைத்து செல்கிறார்.

படத்தின் கதை :

அதற்குப் பின் என்ன நடந்தது? தங்கம் தேடும் இடத்தில் என்னென்ன பிரச்சனை எல்லாம் எதிர்கொண்டார்கள்? கடைசியில் மிராசுகளிடமிருந்து தங்களுடைய இடத்தை மீட்டார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தங்கலான் படம் தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், கோலார் தங்க வயலில் தங்க சுரங்கம் தோன்றுவதற்கு தென் தமிழகத்தில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை கூட்டிட்டு போய் வேலைக்கு அமர்த்திருந்தார்கள்.

https://youtu.be/eCK56ZD_yCY?si=sHFOK1zzP9LqDSqD

ப்ளூ சட்டை மாறன் வீடியோ:

அவர்கள் சிந்திய ரத்தம், வியர்வை, உயிர் பலி என்று அந்த வலி வேதனையை தான் இந்த படத்தில் காண்பித்து இருப்பார்கள் என்று நினைத்து தான் போனார்கள். ஆனால், ரஞ்சித் இந்த படத்தை மாற்றி வைத்திருக்கிறார். ரத்த சரித்திரத்தை படமாக்குவதை விட்டு தான் எவ்வளவு பெரிய அறிவாளி என்பதை தான் காண்பித்திருக்கிறார். வரலாறு, இந்து மதம், கிறிஸ்தவ மதம், முஸ்லிம் மதம் எல்லாத்தையும் இழுத்து வைத்து ஜாதி மத பிரச்சனையில் அரசியலை சொல்லி இருக்கிறார்.

படம் குறித்து சொன்னது :

கதையை நேரடியாக, அழுத்தம் திருத்தமாக சொல்லாமல் ஈயம் பூசி உருட்டி வைத்திருக்கிறார் இயக்குனர். கதையை தான் குழப்பி வைத்திருக்கிறார் என்று விஷுவல் பார்த்தால் ஏற்கனவே பரதேசி, ஆயிரத்தில் ஒருவன் அப்படியே எடுத்து வைத்த மாதிரி தான் இருக்கிறது. பின் வசனம் புரியவில்லை, கதையும் புரியவில்லை. அதோடு பல இடங்களில் சத்தமாக தான் பேசி இருந்தார்கள் தவிர என்ன பேசுகிறார்கள்? என்றே புரியவில்லை. படத்தின் ஆரம்பம் நல்லாதான் இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து கற்பனை கதை, நிகழ்கால கதை என்று மாத்தி மாத்தி என்ன கதை என்று குழம்பி போற அளவுக்கு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full