இப்படி தான் 1000 கோடி வசூல் வடைகளை சுடப் போறீங்களா? ‘கூலி’ படத்தை வெளுத்து வாங்கிய ப்ளூசட்டை மாறன்

By subhashini · 14/8/2025

கூலி படம் தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது உருவாகி இருக்கும் படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கூலி படம் தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

அதாவது, கூலி படத்தினுடைய டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டி ப்ளூ சட்டை மாறன் பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், இப்படியெல்லாம் செய்துதான் ஆயிரம் கோடி வசூல் வடைகளை சுட போறீங்களா? கும்பகோணத்தில் ஒரு திரையரங்கில் டிக்கெட் விலை 150 லிருந்து 200 இருக்கும். ஆனால், இப்போது 400 க்கும் மேல் அதிகமாக விற்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். இதற்கு முன்பு கூலி படத்தினுடைய ட்ரெய்லரில் ரஜினிகாந்த் காக்கா சத்தம் இருக்கும்.

ரஜினி பற்றிய விமர்சனம்:

இதை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன், விஜயை மறைமுகமாக சீண்டுவதற்காக தான் இப்படி வைக்கப்பட்டு இருக்கிறது. விஜய் மீதான கோபமும், எரிச்சலும், பயமும் தெளிவாகத் தெரிகிறது. இனியாவது இப்படி புலம்புவதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவு விஜய்- ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்குப்பின் கூலி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, சௌபினை வழுக்கை என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பலருமே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன், நீங்கள் டோபாவை கழற்றிவிட்டு நடிக்க தயாரா? என்று சவால் விடும் வகையில் பதிவு போட்டிருந்தார்.

கூலி படம் விமர்சனம்:

அதற்குப்பின் கூலி படம் தொடர்பாக நிறைய விளம்பரங்கள் வந்தது. அதை கிண்டல் செய்யும் வகையில் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது மாறன் பதிவில், கமல், லோகேஷ் கனகராஜுக்கு கை கொடுக்கும் வகையில் ஒரு மீம்மை போட்டு இருக்கிறார். இதற்கு அர்த்தம், ரஜினிக்கு தோல்வி படத்தை கொடுத்ததற்காக கமல், லோகேஷ்க்கு நன்றி வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு ரஜினி ரசிகர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

கூலி படத்தின் கதை:

படத்தில் வில்லன் நாகார்ஜுனா விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தன்னுடைய ஆட்களை வைத்து தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். நாகர்ஜுனாவிற்கு வலது கையாக தான் சௌபின் இருக்கிறார். இவர் போலீசுக்கு தகவல் சொல்பவர்களை எல்லாம் கொன்று அந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார்.
இதற்கிடையில் ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜ் இறந்த செய்தி வருகிறது. அப்போதுதான் தன்னுடைய நண்பனின் சாவில் மர்மம் இருப்பதை ரஜினிகாந்த் கண்டுபிடிக்கிறார். சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசனின் துணையோடு தன் நண்பன் சத்யராஜை கொண்டவர்களை கண்டுபிடிக்க ரஜினிகாந்த் முயற்சிக்கிறார். அதற்குப் பின் வில்லன் நாகர்ஜுனா இடத்திற்கே சென்று ரஜினி சந்திக்கும் சவால்கள் தான் படத்தினுடைய மீதி கதை.

behindtalkies AMP · Quick view
View full