காவலருக்கு கை கொடுத்துவிட்டு சல்யூட் அடித்த அஜித் - வீடியோவை கேலி செய்து மாறன் போட்ட ட்வீட்.

By Siva · 24/7/2022

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

https://twitter.com/GaneshAK_FanBoy/status/1551079596636147712

அதோடு இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. பின் மீண்டும் இவர் தனது விமர்சன பணியை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட படத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருந்தார்.

தோல்வியடைந்த வலிமை :

இதையும் போனிகபூரே தயாரித்துஇருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துஇருந்தனர். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம்பெற்று இருந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் நடுத்தர ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை.

https://twitter.com/Manitha43760492/status/1551184233708015616

கேலி செய்த மாறன் :

மேலும், இந்த படம் வெளியானதை பாண்டா பிரஷாந்த், சினிமா பையன் அபிஷேக் என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை குறித்து விமர்சனம் செய்தது பயங்கர சர்ச்சையானது. அதில் அவர், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு. படம் தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார். டான்ஸ் ஆடவே கஷ்டப்படுறார் என்று அஜித்தை உருவ கேலி செய்து இருந்தார்.

https://twitter.com/yesu_charu/status/1551200095462477824

அஜித் செயலை கேலி செய்த மாறன் :

இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித்தை மீண்டும் கலாய்த்து இருக்கிறார் மாறன். சமீபத்தில் நடிகர் அஜித் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அஜித் அருகில் இருந்த காவலருக்கு கைகொடுத்துவிட்டு சல்யூட் அடித்தார். இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் 'சென்னை ஏர்போர்ட்டில் காவலரிடம் எளிமையாக கைகொடுத்த ஏகே. சுற்றி இருந்தோர் ஆச்சர்யத்தில் மூழ்கினர். பிறகு தன் காரில் தானே ஏறி அமர்ந்து புறப்பட்டார்.' என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அஜித்தை விமர்சித்த மாறன் :

ஏற்கனவே அஜித்தின் வெளிநாட்டு ட்ரிப் புகைப்படங்கள் அடிக்கடி ட்ரெண்டிங் ஆன போது சமீபத்தில் பதிவு ஒன்றை போட்ட ஒன்றை பதிவிட்டுள்ள மாறன் 'இசை வெளியீட்டுக்கு வரமாட்டார், தன் படத்தை விளம்பரப்படுத்த மாட்டார், விழாக்களுக்கு வர மாட்டார், பேட்டி கொடுக்க மாட்டார். ஆனால், வருஷத்துக்கு 365 நாளும் அவருடைய போட்டோவை மட்டும் நாம் பார்க்க முடியும். ஏனென்றால் அஜித்திற்கு விளம்பரம் புடிக்காது. அவருக்கு தெரியாம, அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்து போட்ருறாங்க நம்புங்கண்ணே, நம்புங்க' என்று பதிவிட்டு இருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full