பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய SK-இமான் விவகாரம் - வடிவேலு பட காமெடிக்களை எல்லாம் போட்டு கலாய்த்து வரும் ப்ளூ சட்டை

By Arun · 18/10/2023

கில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

https://twitter.com/tamiltalkies/status/1714480672751153551

பொதுவாக ஒரு பெரிய ஹீரோவின் படம் வாந்தாலே அதனை டார்கெட் செய்து ஒரு வாரத்தை ஓட்டிவிடுவார் ப்ளூ சட்டை. இப்படி இருக்கும் போது சமீபத்தில் இமான், சிவகார்த்திகேயன் பற்றி சொன்ன விஷயத்தை கேலி செய்யும் வகையில் பதிவிட்டு இருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் டி இமான் அவர்கள் சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருந்தது, மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது.

அதனை தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை.இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார்.

https://twitter.com/ttnVids/status/1714508691096166472

அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும். அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார். இப்படி டி.இமான் வெளிப்படையாக பேசி இருந்தது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

https://twitter.com/tamiltalkies/status/1714555387721248993

இப்படி ஒரு நிலையில் இமான், சிவகார்த்திகேயன் குறித்து பேசிய பதிவுகளை பதிவிட்ட மாறன் 'CSK எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் - இமான் பேட்டி என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் பெயரை தான் Sk என்பதற்கு பதிலாக CSK என்று குறிப்பிட்டுவிட்டார் என்று பார்த்தால், அடுத்த ட்வீட்டில் 'CSK என்றால் Cringe Sivakarthkeyan. உங்கள் சந்தேகங்கள் தீர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன் ' என்று பதிவிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

மேலும், இந்த விவகாரத்தை விடாமல் கணவன் மனைவி இடையே கோள்மூட்டு விட்டு குடும்பத்தை பிரித்த CSKவின் செயல் சரியானது, கேவலமானது என்று வாக்கெடுப்பை எல்லாம் நடத்தி இருக்கிறார். மேலும், வடிவேலு பட காமெடி, கள்ளக்காதல் காமெடி போன்றவை எல்லாம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மேலும் மேலும், இந்த விவகாரத்தை கிளறி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full