புகழ்றாரா ? கலாய்க்குறாரா? ஜெயிலர் குறித்து புளூ சட்டை மாறனின் சொன்ன விஷயம்.

By Arun · 10/8/2023

ஜெயிலர் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் ட்விட் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், சமீப காலமாக ரஜினி நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

ஜெயிலர் படம்:

படத்தில் ரஜினி அவர்கள் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி மற்றும் பேரன் ரித்திக் உடன் அரக்கோணத்தில் அமைதியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ரஜினியின் மகன் வசந்த ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக இருக்கிறார். அப்போது சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரஜினியின் மகன் வசந்த ரவியை அந்த கும்பல் கொன்றுவிடுகிறார்கள்.

படத்தின் கதை:

இதனால் மனம் உடைந்த ரஜினி தன் மகன் நேர்மையாக இருந்ததனால் தான் இறந்துவிட்டதாக நினைத்து அந்த கும்பலை பழிவாங்க கிளம்புகிறார். இறுதியில் என்ன ஆனது? ரஜினி தன் மகனை கொலை செய்த கும்பலை காவல்துறையிடம் ஒப்படைத்தாரா? பலி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் ரஜினி அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மேலும், இவர் யோகி பாபு உடன் செய்யும் காமெடியும் பயங்கரமாக ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

படம் குறித்த விமர்சனம்:

நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் படம் தோல்வி அடைந்ததால் இந்த படத்தில் அவர் ரொம்பவே மெனக்கட்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கட்சியும் பார்த்து பார்த்து கொடுத்திருக்கிறார். ரஜினி ரசிகர்களுக்கு ஏற்ப ஜெயிலர் படத்தை கொடுத்திருப்பது ஒரு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேலும், அனிருத்தின் பின்னணி இசை பிரமாதமாக செட்டாகி இருக்கிறது. ஆகவே, படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல பாசிட்டிவான கமெண்ட் தான் வந்து கொண்டிருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் பதிவு:

இந்த நிலையில் வழக்கம்போல் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது டீவ்ட்டர் பக்கத்தில் ஜெயிலர் படம் குறித்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நெல்சன் நம்ம பக்கம், மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் கலாய்க்கிறாரா? இல்லை புகழ்கிறாரா? என்று குழப்பத்தில் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இதற்கு ப்ளூ சட்டை மாறன் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full