மூணு பக்கமும் சொம்பு தூக்கும் ஆள் நீங்க' பெரியார் சர்ச்சைக்கு சந்தானம் கொடுத்த விளக்கத்தை விளாசிய ப்ளூ சட்டை மாறன்.

By Rajkumar · 29/1/2024

வடக்குப்பட்டி ராமசாமி படம் குறித்த சர்ச்சைக்கு இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் கொடுத்திருந்த விளக்கதிற்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி, குலு குலு, ஏஜென்ட் கண்ணாயிரம்,கிக் போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

https://twitter.com/asuvathaman/status/1746901931736625330

தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானதிற்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம் எஸ் பாஸ்கர், ரவி மரியா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பீப்பிள் மீடியா ,நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பின் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

வடக்குப்பட்டி ராமசாமி படம்:

இந்த ட்ரெய்லரில் வரும் பெரியார் குறித்த காட்சி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. குறிப்பாக, அதில் சந்தானம் அவர்கள், நான் அந்த ராமசாமி இல்லை என்று கூறி கூறியிருப்பார். இது அவர் பெரியாரைக் குறித்து தான் கூறியிருக்கிறார் என்று விமர்சித்து இருக்கிறார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த வாரம் இது தொடர்பாக கூட படத்தின் இயக்குனர் விளக்கம் கொடுத்து பேட்டி அளித்து இருந்தார். இருந்தாலும், பலர் சந்தானத்தை திட்டி வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=iQFV1Qhe1vw

சந்தானம் விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த சர்ச்சைக்கு பதில் அளித்த சந்தானம் ' படத்தில் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அப்போது நான் தயாரிப்பாளிடம், எதற்கும் பயப்பட வேண்டாம். இதெல்லாம் படத்திற்கான ப்ரோமோஷன் என நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இந்த படத்தில் எந்த தவறான விஷயமும் கிடையாது. ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே எங்களுடைய நோக்கம்.

அந்த எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது :

மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும், தாக்கி பேச வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது. இந்த படத்தில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்றால் நானும் இயக்குனரும் கவுண்டமணி சாரின் ரசிகர்கள். டிக்கிலோனா அவருடைய டயலாக். அப்படித்தான் வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணியின் வசனம் இது. நான் சினிமாவுக்கு வந்த நோக்கம் மக்களாகிய உங்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான்.

https://twitter.com/tamiltalkies/status/1751144723136516568

விளாசிய ப்ளூ சட்டை :

கடவுளுக்கு தெரியும் காசு பணத்தை நோக்கி போக வேண்டி இருந்தால் போயிருப்பேன். அடுத்து புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்பது தான் ஆசை என்று கூறி இருந்தார். சந்தானத்தின் இந்த விளக்கம் குறித்து விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன் 'ப்ரமோஷனுக்காக எதையும் செய்வது ப்ரமோஷன் ஆகாது. ரெட் ஜெயண்ட் உங்கள் படத்தில் இருந்து பின் வாங்கியதே அந்த ப்ரமோஷனால்தான். எல்லாரும் ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள். ஆனால் உதயநிதியின் நண்பன், பாமக ஆதரவாளன், சங்கி என மூன்று பக்கமும் சொம்பு தூக்கும் ஆள் கோடம்பாக்கத்தில் நீங்கள் ஒருவர்தான். அனைவருக்குமான காமடியான இருக்கும் வரைதான் இங்கே மதிப்பு. சாதி, மதம், ஆளுங்கட்சி என கலர் கலராக பச்சோந்தி வேடம் போட்டால்.. மக்கள் ஒதுக்கி விடுவார்கள். அது சூப்புற ஸ்டாராக இருந்தாலும் சரி. இதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்.' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full