எங்க தாத்தா ஏன் தமன்னா கூட ஐட்டம் டான்ஸ் ஆடப் போறாரா - ரஜினியை வம்பிழுத்த ப்ளு சட்டை.

By Siva · 10/7/2023

ரஜினியின் காவாலா பாடலை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருகிறார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

குறிப்பாக கடைசியாக ரஜினி நடிப்பில் வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து நடிக்க இருக்கும் படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வரும் ரஜினி தற்போது “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை எனவே இவருக்கு “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார். மேலும், இடபடத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலானது துள்ளல் அதிகம் உள்ள கலக்கலான பாடலாக வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

இந்த பாடலை அருண் ராஜா காமராஜ் எழுதியிருக்கிறார். இந்த பாடலுக்கு தமன்னா படு கிளாமராக நடனமாடி இருக்கிறார். அதோடு இந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் செம ஸ்டைலாக டான்ஸ் ஆடி இருக்கிறார். மேலும், இந்தப் பாடலில் கூலர்சை கழட்டி மாட்டுவதை செம மாசாக ரஜினி செய்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக காவாலா படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு பெற்று வருகிறது. இருந்தாலும், இன்னொரு பக்கம் நெட்டிசன்கள் இந்த பாட்டை ட்ரோல் செய்து வருகிறார்கள். அதில், ரஜினிக்காக இல்லை என்றாலும் தமன்னாவிற்காக இந்த படத்தை தியேட்டரில் பார்க்கணும்.

அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த வயதிலும் தன் மகள் வயதுடைய நடிகை உடன் இப்படி குத்தாட்டம் ஆடலாமா? இந்த ஐட்டம் பாடலுக்கு தமன்னாவுடன் ரஜினிகாந்த் ஆடுவதா? என்றெல்லாம் விமர்சித்து பதிவிட்டு இருந்தார்கள். அதற்கு ஒருவர், உங்க வீட்டில் உள்ளவங்களை இப்படி வயது வைத்து கிண்டல் பண்ணுவீங்களா? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு இன்னொருவர், எங்க தாத்தா ஏண்டா தமன்னா கூட ஐட்டம் டான்ஸ் ஆட போறாரு! என்று கலாய்த்து பதில் கொடுத்திருக்கிறார். இதை ப்ளூ சட்டை மாறன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து ட்ரோல் செய்து இருக்கிறார்கள். இதற்கு ரஜினி ரசிகர் பலரும் கடுமையாக கண்டித்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full