ரஞ்சித் தயாரிப்பில் அஷோக் செல்வன் நடித்துள்ள 'ப்ளூ ஸ்டார்' எப்படி? இதோ விமர்சனம்

By subhashini · 25/1/2024

அறிமுக இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதோடு ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்கள் இணைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார். குறிப்பாக, படத்தில் காதல் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை இயல்பான காட்சிகளே தான் இருக்கிறது. செயற்கைத் தனமாக எந்த காட்சிகளும் இல்லை. நகைச்சுவையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கோவிந்த் வசந்தனின் பின்னணி இசை கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. மேலும், கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ள அனைவரும் ரசிக்கும் படியாக இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

கிரிக்கெட்டில் இருக்கும் அரசியலையும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். அதுவும் பெரிதாக பாதிக்காத வகையில் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களிடையே ஏற்படும் அரசியல்கள், காலனி தெரு மக்களுக்கு ஏற்படும் அவமானங்களை படத்தில் தெளிவாக காண்பித்து இருக்கிறார்கள். படத்தில் இறுதியில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் படத்தினுடைய அழுத்தத்தை குறைக்கும் வகையில் இருக்கிறது. காலனி தெரு பையனாக அசோக் செல்வனும், ஊர் தெரு பயனாக சாந்தனுவும் நடித்திருக்கிறார்கள். இருவருடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக ப்ளூ ஸ்டார் இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம் அருமை

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

முதல் பாதையில் நன்றாக இருக்கிறது

பாடல்களும் நகைச்சுவையும் சூப்பர்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

இறுதியில் வரும் காதல் காட்சியை குறைத்து இருக்கலாம்

கிரிக்கெட் அரசியல் குறித்த சர்ச்சை

மொத்தத்தில் ப்ளூ ஸ்டார்- மின்னும்

Tamil Behind Talkies AMP · Quick view
View full