விஷாலினின் படத்தில் இரண்டு முறையும், மிஸ்கின் படத்தில் ஒரு முறையும் மிஸ் ஆகிடிச்சி. இல்லனா தமிழில் அறிமுகமாகி இருப்பேன்.
உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் பிரபல ஹிந்தி பட நடிகை ஷரதா தாஸ் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். ஹிந்தியில் 'லஹோர், தில் தோ பச்சா ஹை ஜி, லக்கி கபூடர், ஜித்', தெலுங்கில் 'சித்து ஃப்ரம் சிக்காகுலம், அதிநேதா, ஆர்யா 2, மரோ சரித்ரா, டார்லிங், நாகவள்ளி, முகுரு, மோகுடு, ரே, பண்டிபோட்டு, குண்டூர் டாக்கீஸ், PSV கருட வேகா', கன்னடத்தில் 'ஹோசா பிரேமா புரனா, ஒய்ஜா, உத்கர்ஷா', மலையாளத்தில் 'டிராகுலா 2012' போன்ற பல மொழி படங்களில் நடித்தவர் நடிகை ஷரதா தாஸ்.
https://www.youtube.com/watch?v=wGJJez-ecHM
ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமில்லாமல் பெங்காலி மொழியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஷரதா தாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளி வந்த பெங்காலி திரைப்படம் 'பேந்தர் : ஹிந்துஸ்தான் மேரி ஜான்'. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தினை இயக்குநர் அன்ஷுமன் பிரத்யூஷ் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நடிகர் ஜீத் நடித்திருந்தார்.
இப்போது நடிகை ஷரதா தாஸ் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் "நான் கிளாமராக நடிப்பதால் எனது வீட்டில் என்னை தவறாக நினைக்க மாட்டார்கள். ஏனெனில், எங்க அப்பா, அம்மா ரொம்ப மாடர்ன் டைப் தான்.. எங்க அப்பா ஜெனிஃபர் லோபெஸ்ஸின் மிகப் பெரிய ரசிகர். மும்பையில் பல ஹீரோயின்ஸ் கிளாமராக தான் நடிக்கிறார்கள். நானும் மும்பை பெண் என்பதால் எனக்கு அது தப்பாக தெரியவில்லை. நான் தமிழ் மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறேன். இரண்டு முறை விஷால் படங்களில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது. அதேபோல், பிரபல இயக்குநர் மிஷ்கின் படத்திலும் மனித வெடிகுண்டாக நடிக்கும் ஒரு ரோலில் நடிக்கவிருந்து, பின் சில காரணங்களால் வாய்ப்பை தவற விட்டேன்" என்று ஷரதா தாஸ் தெரிவித்திருக்கிறார்.