உருவத்தை சுட்டி காட்டி கேள்வி கேட்ட பாலிவுட் தொகுப்பாளர். அட்லீ கொடுத்த பதில்

By subhashini · 15/12/2024

நிகழ்ச்சி ஒன்றில் தன்னை குறித்த உருவ கேலிக்கு அட்லீ கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் சினிமா உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

அதன் பின் தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அட்லீ குறித்த தகவல்:

இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். கடைசியாக இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி,தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது.

அட்லீ திரைப்பயணம்:

இதை அடுத்து இவர் தன்னுடைய அடுத்த படத்தின் வேலையில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது இவர் தெறி படத்தினுடைய இந்தி ரீமேக்கை தயாரித்திருக்கிறார். ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தொகுப்பாளர் கிண்டல்:

அந்த வகையில் இந்தியில் நடக்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பேபி ஜான் படக்குழுவினருடன் அட்லீயும் கலந்து கொண்டிருந்தார். அப்போது தொகுப்பாளர், நீங்கள் பிரபல இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கிறீர்கள். பல பிரபலமான நடிகர்களுடன் பணியாற்றியும் இருக்கிறீர்கள். நீங்கள் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் உங்களை எப்படி பார்த்தார்கள்? என்று அவரை ட்ரோல் செய்யும் வகையில் கேள்வி கேட்டிருந்தார்.

அட்லீ கொடுத்த பதிலடி:

உடனே அட்லீ, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று எனக்கு புரிந்தது. என்னுடைய முதல் படத்தை ஏ.ஆர் முருகதாஸ் சார் தான் தயாரித்தார். அப்போது அவரிடம் என்னுடைய கதையை கொடுத்தேன். அவர் என்னையும், என்னுடைய தோற்றத்தையும் பார்த்தார். இருந்தாலுமே அவருக்கு என்னுடைய கதை ரொம்ப பிடித்தது. அவர் என்னுடைய தோற்றத்தை பார்க்காமல் என்னுடைய இதயத்தை பார்த்தார் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். தற்போது இவர் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full