ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கோடிகளில் வாங்கும் பிரபலங்கள் - முதல் இடத்தில் இருக்கும் பிரியங்கா எவ்ளோ கோடி வாங்குறார் பாருங்க.

By Rajkumar · 8/2/2022

பொதுவாகவே நடிகர், நடிகைகள் அழகு சாதன பொருட்கள், துணிகள், நகைகள், உணவு பொருட்கள் என பல விளம்பரங்களில் நடிப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்கள். சினிமாவில் சம்பாதிப்பதற்கு இணையாக விளம்பரங்களில் நடித்தும் கோடிக்கணக்காக நடிகர்கள் சம்பாதித்து வருகிறார்கள். இதில் சின்ன நடிகர்கள் முதல் பிரபலமான நடிகர்கள் வரை என பலரும் விளம்பரங்களில் நடித்து சம்பாதித்து வருகிறார்கள். ஒரு படத்தில் கஷ்டப்பட்டு நடித்து வாங்கும் சம்பளத்தை காட்டிலும் விளம்பரங்களில் நடித்து அதிகமாக வாங்குகிறார்கள். தற்போது இது ஃபேஷன் ஆகவே மாறி வருகிறது. அதிலும் சமீபகாலமாக பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் பொருள்களை விற்பனை செய்யும் விளம்பரங்களில் அதிகம் நடித்து வருகிறார்கள்.

இது தமிழ் மொழி மட்டுமில்லாமல் எல்லா மொழி நடிகர்களும் விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள். அதிலும் சமீப காலமாகவே முன்னணி நடிகர், நடிகைகள் அதிக பணம் வாங்கிக் கொண்டு வெளிநாட்டு மது விளம்பரங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தள பக்கங்களில் விளம்பரம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதில் சில தரமற்ற பொருள்களை நடிகைகள் விற்பதன் சில பல பிரச்சினைகள் இருந்தது.

சோசியல் மீடியா மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியல்:

இதனால் சில மாதங்களுக்கு முன்பு மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராமில் பல்வேறு பிராண்டுகளை விளம்பரம் செய்து வருகிறார்கள். இதனால் இவர்கள் கோடிக்கணக்கில் பணம் வாங்கி வருகிறார்க. இந்நிலையில் சோசியல் மீடியா மூலம் விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ஷாருக்கான்:

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் .அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் வசூல் செய்யும். மேலும், இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஏறக்குறைய 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குகிறார். இவரை 2.7 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். அதோடு ஷாருக்கான் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதோடு இவர் பல விளம்பரங்களில் நடித்தும் இருக்கிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் இவரை 7.3 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1.8 கோடி ரூபாய் வாங்குகிறார். சமீபத்தில் தான் இவருக்கு வாடகை தாய் மூலம் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது.

ஆலியா பட்:

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக ஆலியா பட் கலக்கி கொண்டு இருக்கிறார். ஹைவே, கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் படங்களில் உள்ளார். சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் இவர் தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். மேலும்,இவரை இன்ஸ்டாகிராமில் 5.8 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வாங்குகிறார்.

தீபிகா படுகோன்:

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக தீபிகா படுகோன் திகழ்கிறார். இவர் இந்தியில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்து இருக்கிறார். சமீப காலமாக கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், இவரை இன்ஸ்டாகிராமில் 6.4 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் ஒரு பதிவிற்கு ஏறக்குறைய 1.5 கோடி ரூபாய் வாங்குகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full