அட கொடுமையே இந்த படத்தால் போண்டா மணிக்கு இப்படி ஒரு நிலைமையா - என்ன ஆனது ? கண்ணீருடன் அவர் சொன்ன விஷயம்.

By Rajkumar · 22/9/2022

இந்த படத்தால் தான் இரண்டு சீறுநீரங்களை இழந்து இருக்கிறேன் என்று போண்டா மணி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய உண்மையான பெயர் கேதீஸ்வரன். இவர் பல போராட்டங்களுக்கு பிறகு தான் பாக்யராஜை சந்தித்து சினிமா வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

தற்போது இவர் தனுஷ், விஜய் சேதுபதி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதுவரை இவர் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் கன்னட பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் மாதவி. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருக்கிறார். பின்னர் நடிகர் போண்டா மணிசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருக்கிறது.

போண்டா மணி அளித்த பேட்டி:

இந்நிலையில் பிரபல சேனல் இவரை நேரில் சந்தித்து பேட்டி ஒன்று எடுத்திருந்தது. அதில் அவர் கூறியது, ஆறு மாதமாகவே என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. நான் ஒத்துக் கொண்ட ப்ராஜெக்ட் எல்லாம் முடிக்கணும் என்று தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தேன். பருவ காதல் என்ற ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் சாக்கடையில் விழுகிற மாதிரி சீன் இருக்கும். அதை தத்துரூபமாக எடுக்க வேண்டும் என்று நிஜ சாக்கடையில் என்னை விழ வைத்தார்கள். அந்த சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. அந்த படபிடிப்பு தளத்திலேயே மூச்சு திணறி மயக்கம் ஆனேன். அதற்கு பிறகு தொடர்ந்து சிகிச்சையும் எடுத்து வந்தேன். பின் பத்து நாட்கள் ஓய்வெடுத்து கமிட்டான படத்தில் நடித்தேன்.

இரண்டு சிறுநீரகமும் செயல் இழக்க காரணம்:

தொடர்ந்து பல ஊர்களுக்கு ட்ராவலிங் பண்ணினேன். இதனால் எனக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையும் பண்ணினார்கள். இருந்தும் தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு இருந்தேன். அப்போது தான் என்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த விஷயம் தெரிந்தது. என்னுடைய வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு துயரம் ஏற்பட்டது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் போன் செய்து அடிக்கடி என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார். இப்போது எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே கொஞ்ச நாளைக்கு உயிர் வாழ முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். முதலமைச்சர் மனசு வைத்தால் மட்டும் அது முடியும்.

குடும்பத்தின் நிலைமை:

நான் எல்லோருடனும் நடித்திருக்கிறேன். எல்லோரும் எனக்கு கருணை காட்டுவார்கள் என்று நம்புகிறேன். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து உதவினால் நன்றாக இருக்கும். வடிவேல் சாருடன் சேர்ந்த பிறகு தான் போண்டாமணி என்று ஒருத்தன் இருக்கான் என்பது வெளியில் தெரிய ஆரம்பித்தது. ஆனால், அவர் போன்ல கூட விசாரிக்கவில்லை . நான் பெரிய அளவில் சொத்து எல்லாம் சேர்த்து வைக்கவில்லை. சொந்த வீடு கூட கிடையாது. என் மனைவி மாற்று திறனாளி. என்னுடைய மகள் 12 ஆம் வகுப்பு படிக்கிறாள். பையன் பத்தாவது படிக்கிறான். அன்றாடம் சம்பாதித்தால் தான் என்னுடைய குடும்பத்தை நடத்த முடியும். இன்னும் என்னுடைய பிள்ளைகளை கரை சேர்க்க வில்லை. அவர்களுக்காகவும் நான் எதுவும் சேர்க்க வைக்கவில்லை.

https://www.youtube.com/watch?v=XKizlNztQhQ

உதவி கேட்டு கோரிக்கை வைத்த போண்டா மணி:

கடவுள் ஏன் எனக்கு இவ்வளவு பெரிய வியாதியை கொடுத்தார்? என்று தெரியவில்லை. சிறுநீரகம் மாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் டயாலிசிஸ் பண்ணனும் என்று சொல்லியிருக்கிறார்கள். சிறுநீரகம் மாற்ற பணம் வேண்டும். எப்படியும் 10 லட்சம் மேல தேவைப்படும். நடிகர் சங்கத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? என்று தெரியவில்லை. அவர்கள் ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும். விவேக் சார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நான் யார்கிட்டயும் கையேந்த வேண்டிய அவசியமே வந்து இருக்காது. அவரே ஓடிவந்து உதவியிருப்பார். என்னுடைய மனைவியே அவர்களுடைய கிட்னியை தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். மருத்துவர்கள் அதுக்கு இன்னும் எந்த பதிலையும் சொல்லவில்லை என்று மன வேதனை உடன் போண்டாமணி கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full