வடிவேலு என்கிட்ட சொல்லாமே அப்படி பண்ணிட்டார், எனக்கு ரத்தமே வந்துடிச்சி - போண்டா மணி சொன்ன ஷாக்கிங் உண்மை.

By Arun · 12/5/2023

வடிவேல் சார் என்கிட்ட சொல்லாமல் எடுத்த காட்சியால் மூக்கில் ரத்தமெல்லாம் வந்திருக்கு என்று போண்டாமணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதுவரை இவர் 270 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் கன்னட பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட விஷவாயுவால் போண்டா மணி பாதிக்கப்பட்டு இருந்தார்.

போண்டா மணி உடல்நிலை:

பின்னர் நடிகர் போண்டா மணி சென்னை உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். அதோடு இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருக்கிறது. இதற்கு மருத்துவ செலவு செய்ய கூட பணம் இல்லாத நிலையில் போண்டா மணி உதவி கேட்டு பேட்டி அளித்து இருந்தார்.

போண்டா மணிக்கு உதவிய பிரபலங்கள்:

பின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அவர்கள் போண்டா மணி நலம் குறித்து விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து இருந்தார். அதனை தொடர்ந்து பல பிரபலங்கள் போண்டா மணிக்கு உதவி செய்து இருந்தார்கள். இதனை அடுத்து போண்டாமணியின் மருத்துவ செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். பின் போண்டா மணிக்கு நல்ல படியாக சிகிக்சை செய்யப்பட்டது.

போண்டா மணி அளித்த பேட்டி:

தற்போது போண்டா மணி டிஸ்சார்ஜ் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் போண்டாமணி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் வடிவேலுடன் நடித்த அனுபவம் குறித்து கூறியது, சுந்தரா டிராவல்ஸ் படத்தில் மாப்பிள்ளை காட்சி ஒன்று வரும். அந்த படத்தில் பஸ்ஸிலிருந்து வரும் புகையால் நான் கருப்பாகிவிடுவேன். ஆனால், முதலில் அந்த பஸ்ஸில் புகை அந்த அளவிற்கு வராது என்று சொன்னார்கள். உடனே வடிவேலு சார் வெடித்து புகை வர வைக்குமாறு ஒரு ஐடியா பண்ணார். இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.

வடிவேலுடன் நடித்த அனுபவம்:

நான் நின்ற உடனே வெடிகுண்டை வெடிக்க வைத்து மருந்தெல்லாம் பயங்கரமாக சிதறியது. மூக்கின் உள்ளெல்லாம் புகை போனது. அதற்கு பிறகு தான் என்னிடம் இதை பற்றி சொன்னார்கள். மேலும், ஒரு வாரம் என் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. ஆனாலும், அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இதற்கு வடிவேலு இவ்வளவு ரிஸ்க் எடுத்தா? இதில் நடித்தது என்று வருத்தப்பட்டார். அதேபோல் இன்னொரு படத்தில் சாம்பாரை என் தலையில் ஊற்றுவார்கள். அது சுட சுட இருந்தது. அதை அப்படியே என் தலையில் வடிவேலு சார் ஊற்றி விட்டார். ஒரு காட்சி பிரமாதமாக வருவதற்கு அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full