தமிழில் கண்டேன் காதலை, ஜெயங்கொண்டான், சேட்டை போன்ற பல படங்களை இயக்கியவர் இயக்குனர் கண்ணன் தற்போது அதர்வாவை வைத்து ‘பூமராங்’ என்ற திரைப்படத்தை அளித்துள்ளார். இந்த திரைப்படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை தற்போது காணலாம்.

கதைக்களம் :

Advertisement

இந்தப் படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதர்வா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் ஹீரோ சக்தி. ஒரு கட்டத்தில் இவரை கொலை செய்ய சில நபர்கள் வருகின்றனர் பின்னர் அவர் அந்த அலுவலகத்தில் இருந்து வேலையிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறார். பின்னர் தனது சொந்த ஊருக்கு வருகிறார் சக்தி. ஆனால் அவரது சொந்த ஊரில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. எனவே, தனது கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தனது 2 நண்பர்களான ஆற ஜே பாலாஜி, இந்துஜாவுடன் சேர்ந்து பல தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முயற்சிகளை எடுக்கிறார்.

இது அங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போக அவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது இறுதியில் தனது கிராமத்திற்காக சக்தி என்ன செய்தார் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார் இறுதியில் கிராமத்தின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டன வா என்பதே படத்தின் மீதிக்கதை.

Advertisement

ப்ளஸ் :

Advertisement

படத்தின் மிகப் பெரிய பிளஸ் படத்தின் மையக்கரு தான் அரசியலையும் படத்தில் நதிகள் இணைப்பு பற்றி மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே மையக் கதையை எடுத்துக் கொண்டு அதனை சுவாரசியமான திரைக்கதையுடன் கொடுத்துள்ளார் இயக்குனர். படத்தின் பாடல்கள் நினைவில் இல்லை என்றாலும் ஆக்ஷன் மற்றும் அதிரடி காட்சிகளில் பின்னணி இசை கைகொடுக்கிறது. சண்ட மற்றும் ஒளிப்பதிவு நினைவில் பதிகிறது. மேலும், ஆர்ஜே பாலாஜி, அதர்வா, இந்துஜா வரும் காட்சிகள் அனைத்தும் கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தது

மைனஸ் :

நடிகர் அதர்வா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால், இந்த படம் ஒன்றும் வித்தியாசமான கதை இல்லை. தற்போதுள்ள அரசியல்வாதிகளின் மெத்தனத்தை சுட்டிக் காட்டுவதே இந்த படத்தின் மைய கதையாக இருக்கிறது. இருப்பினும் ஏற்கனவே கேள்விப்பட்ட கதை என்பதால் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. இறுதியில் நதிகள் இணைப்புகாண தீர்வும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அதேபோல படத்தில் கதாநாயகியாக வரும் மேகா ஆகாஷ் படத்திற்கு எந்த விதத்திலும் பயன் தரவில்லை. படத்தின் இசையும் சொல்லிக்கொள்ளும்படி காதுக்கு இனிமை அளிக்கவில்லை. காமெடி என்ற பெயரில் சதீஷ் மொக்கை போட்டுள்ளார்

இறுதி அலசல் :

வித்தியாசமான கதையை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் அளிக்கும் ஸ்டைலை கொண்டவர் இயக்குனர் கண்ணன். இந்த படத்திலும் அதே போன்ற ஒரு முயற்சியை எடுத்துள்ளார். அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டுள்ளார் மேலும், படத்தில் அதர்வாவின் நடிப்பு மிகவும் பாராட்டக் கூடியது. விறுவிறுப்பான கதை இல்லை என்றாலும் இக்கால கட்டத்திற்கு தேவையான ஒரு சுமாரான படம் தைரியமாக குடும்பத்துடன் ஒருமுறை கண்டு களிக்கலாம். இந்த படத்திற்கு Behindtalkies-ன் மதிப்பு 5.5.

Advertisement