தன் முதல் மனைவிக்கு பிறந்த மகளுடன் வலிமை படத்தை பார்த்த போனி கபூர் - அட, இந்த இந்தி நடிகர் தான் இவர் பையனா.

By Ajju · 28/2/2022

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில தினங்களுக்கு முன் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார்.

இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். படத்தில் சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.

வலிமை படம் பற்றிய தகவல்:

இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அஜித்துக்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் முதல் நாள் வசூலில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முந்தி இருக்கிறது வலிமை படம்.

வலிமை படத்தின் வசூல்:

அதுமட்டும் இல்லாமல் படம் வெளியாகி மூன்று நாளில் 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ‘வலிமை’ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தை தயாரிப்பாளர் தன் மூன்று மகள்களுடன் பார்க்க சென்று இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வலிமை படம் பார்க்க குடும்பத்துடன் சென்ற போனி கபூர்:

வலிமை படத்தை முதல் நாள் முதல் காட்சியைப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஹூமா குரைஷி, கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்தனர். பின் போனி கபூர் மற்றொரு முறை வலிமை படத்தைத் தன்னுடைய மகள்கள் ஜான்வி, குஷி, அனுஷ்லா உள்ளிட்டோருடன் பார்த்து உள்ளார். இந்த நிகழ்வில் ஜாவித் அக்தர், ஹுமா குரைஷி, நடிகர் சாஹிப் சலீம், சதிஷ் கௌஷிக், நடிகை பிரச்சி ஷா உள்ளிட்ட பாலிவுட் சினிமா பிரபலங்களும் உடன் இருந்தனர். போனி கபூர் அவர்கள் 1983 ஆம் ஆண்டு மோனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்கள் தான் அனுஷுலா மற்றும் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர்.

போனி கபூர் குடும்பம்:

பின் முதல் மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1996 ஆம் ஆண்டு பிரிந்தார். பின் இவர் ஸ்ரீதேவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஜான்வி, குஷி. இந்நிலையில் போனி கபூர் தன் 3 மகள்களுடன் சேர்ந்து வலிமை படம் பார்த்து உள்ளார். திரையரங்கிற்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது வெளியானது. அதில் அனுஷுலா முன்னர் இருந்ததை விட தற்போது மெலிந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இதை பார்த்த சிலர் போனி கபூருக்கு இன்னொரு மகள் இருக்கிறாரா! என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள். இந்த நிகழ்வில் அர்ஜுன் கபூர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full