வண்டி ஓட்டுவதை குறைத்து விட்டு சினிமாவில் நடிக்க வாங்க - டிடிஎஃப் வாசனுக்கு போஸ் வெங்கட் கொடுத்த அட்வைஸ்

By subhashini · 10/11/2025

சமீப காலமாகவே சோசியல் மீடியவில் சர்ச்சை நாயகனாக யூடியூபர் டிடிஎப் வாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும் வழியில் ஏழைகளுக்கு உணவு மற்றும் சாப்பாடு உதவிகள் செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். இதனால் இவர் சீக்கிரமாகவே 2K கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார். இருந்தாலும், இவர் வண்டியில் அதிவேகமாகச் சென்று பிறரை பயமுறுத்துவதும், சாலை விதிகளை மீறுதல் என பல வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.

அதன் பின் டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் செல்அம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசனை நீக்கி இருந்தார்கள். இது தொடர்பாக மனவேதனையில் டிடிஎஃப் வாசன் வீடியோ வெளியிட்டு இருந்தார். பின் படத்தின் இயக்குனர் வாசன் இருவரும் மாற்றி மாற்றி புகார் அளித்து இருந்தார்கள். தற்போது டிடிஎப் வாசன் அவர்கள் ஐபிஎல் ( Indian Penal Law) என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கருணாநிதி எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கிஷோர், போஸ் வெங்கட், நடிகை அபிராமி உட்பட நடித்திருக்கிறார்கள்.

டிடிஎப் வாசன் குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்து கொண்ட நடிகர் போஸ் வெங்கட், இந்த படத்தின் மூலம் நான் இன்னும் கொஞ்சம் சினிமாவை கற்றுக் கொண்டேன். அற்புதமான அரசியல் ஒன்று இந்த படத்தில் இருக்கிறது. கிஷோர் சார் எதார்த்தமான ஒரு நடிகர். அவரிடம் ஒரு துளி திமிர் கூட கிடையாது. கொஞ்சமாவது திமிர் இருக்க வேண்டும். திமிர் இருந்தால்தான் மனிதன். அப்படி இல்லை என்றால் அவன் கடவுள். திமிரு இல்லாத ஒரு நடிகரை நான் பார்த்திருக்கிறேன் என்றால் அது கிஷோர் சார் தான்.

போஸ் வெங்கட் சொன்னது:

இந்தியா சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவிலும் வெற்றி அடைவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் சந்தித்த பல பஞ்சாயத்துகளில் டிடிஎஃப் வாசன் பஞ்சாயத்தும் ஒன்று. டிடிஎஃப் வாசனுடைய அறிமுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. டிடிஎஃப் வாசன், ஐபிஎல் படத்தில் நடிப்பதை என்னிடம் ஏர்போர்ட்டில் ஒருவர் கேட்டிருந்தார்கள். youtube பிரபலம் சினிமாவிற்கு வருவது எந்த விதத்தில் தவறாக இருக்கும்?
ஒரு தியேட்டருக்கு 100 பேர் வந்து படம் பார்க்க வேண்டும்.

டிடிஎப் வாசன் பற்றி சொன்னது:

அந்த 100 பேரை யாரெல்லாம் அழைத்து வருகிறார்களோ அவரெல்லாம் ஹீரோதான். அந்த வகையில் டிடிஎப் வாசனிற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. டூ வீலர் எல்லாம் ஓட்டுங்கள். ஆனால், சட்டப்படி அரசுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டங்கள். போலீஸ் மற்றும் மக்களுக்கு பிரச்சினை இல்லாமல் வண்டி ஓட்டுங்கள். இருந்தாலும் வண்டி ஓட்டுவதை குறைத்துக் கொண்டு சினிமாவிற்கு வாருங்கள். உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று கூறுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full