தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் தாடி பாலாஜிக்கே Get Out? நடந்தது என்ன? முழு விவரம் இதோ

By subhashini · 26/2/2025

தவெகவின் கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போட மறுத்து இருக்கும் தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘தளபதி 69’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன் பின் இவர் தன் கட்சியின் கொடி, பாடல், உறுதிமொழி, கொள்கை எல்லாம் அறிவித்து இருந்தார்.

விஜய் அரசியல்:

மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இவர் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்தி இருந்தார். இதை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதோடு வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்து இருந்தார். அதன் பின் தன் கட்சிக்காக புது செயலியை உருவாக்குவதாக அறிவித்து இருந்தார். இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து இருக்கிறது. இதனால் கட்சி அலுவலகத்தில் விழா நடத்தி இருந்தர்கள்.

விஜய் கட்சி இரண்டாம் ஆண்டு விழா:

பின் சமீபத்தில் தான் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய கட்சியின் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.
மேலும், இந்த கட்சியை துவங்கி ஓராண்டு நிறைவடைந்தது அடுத்து கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலருமே கலந்து கொண்டிருந்தார்கள்.

விழா குறித்த தகவல்:

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதில் இருந்தும் ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வந்திருந்தார்கள். மொத்தம் 2500 பேருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சில பேர் விழா நடக்கும் இடத்திற்கு வர முடியாமல் தவித்தார்கள். அதுமட்டுமில்லாமல் சில பேர் போலி பாஸ்களை எல்லாம் வைத்துக்கொண்டு உள்ளே வந்தார்கள். இதையெல்லாம் அங்கிருந்த பவுன்சர்கள் கண்டுபிடித்து அவர்களை வெளியேற்றி விட்டார்கள்.

பாலாஜிக்கு நடந்தது:

இப்படி இருக்கும் நிலையில் இந்த விழாவில் தாடி பாலாஜியை நிராகரித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகரும் உறுப்பினரும் ஆன தாடி பாலாஜி அவர்கள் இன்று விழா நடக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அங்கிருந்து பவுன்சர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவும் இல்லை. 15 நிமிடங்கள் தாடி பாலாஜி வெளியவே காத்திருந்திருக்கிறார். அதற்கு பின் தான் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அதுமட்டுமில்லாமல் எந்த பொறுப்பும் கிடைக்கவில்லை என்று எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றெல்லாம் பாலாஜி பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full