#BoycottSaiPallavi சமூக வலைதளத்தில் டிரெண்டாக என்ன காரணம்? சாய் பல்லவி பேசியது என்ன?

By subhashini · 29/10/2024

அமரன் படம் வெளியாக இருக்கும் நிலையில் சாய்பல்லவிக்கு எதிராக எழுந்து வரும் கண்டனங்கள் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்தியா சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் தான் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சில தினங்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவி அவர்கள் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றிருந்தார்.

அமரன் படம்:

அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, அமரனுக்காக பிரமோஷன் நிகழ்வுகளை தொடங்கும் முன்பு தேசிய போர் நினைவிடத்தை பார்க்க விரும்பினேன். சில நாட்களுக்கு முன்பு தான் சென்றிருந்தேன். நமக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக ஆயிரக்கணக்கான செங்கல் கட்டிடங்கள் வைக்கப்பட்டுள்ள இந்த புனித ஆலயம் என்று கூறி இருந்தார். இப்படி இவர் போட்டிருந்த பதிவை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து இருக்கிறார்கள். காரணம், இவர் ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் தொடர்பாக அளித்த பேட்டி வீடியோ தான். அதாவது, சாய் பல்லவி மற்றும் ராணா நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த படம் விரத பர்வம்.

சாய்பல்லவி குறித்த தகவல்:

இந்த படத்தில்1990களில் வாழ்ந்த மாவோயிஸ்டுகளின் பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் மாவோயிஸ்டை காதலிக்கும் வெண்ணிலாவாக சாய் பல்லவி நடித்திருந்தார். அதோடு இந்த படத்தின் ப்ரோமோஷனின்போது நடிகை சாய் பல்லவி, எனக்கு வன்முறை குறித்து எது சரி, எது தவறு என்பதை புரிந்து கொள்வது கஷ்டம். பாகிஸ்தானில் இருப்பவர்கள் எல்லாம் நம் இந்திய நாட்டு ஜவான்களை தீவிரவாதிகள் என்று தான் சொல்வார்கள். ஏனென்றால், நம்மை தாக்கும் ஒருவரை நாம் அப்படித்தான் சொல்லுகிறோம். அதனால், அவர்களை தாக்குபவர்களையும் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

சாய் பல்லவி வீடியோ:

மேலும், ‘தி காஷ்மீரி பைல்ஸ்’ படத்தில் கூட காஷ்மீர் பண்டிதரை எப்படி அவர்கள் கொன்றார்கள் என்று காட்டினார்கள். இதை நீங்கள் மதச்சண்டையாக பார்த்தால், சமீபத்தில் கூட ஒருத்தர் தனது வண்டியில் மாட்டை வைத்துக்கொண்டு சென்றார். அவரைக் கூட சில நபர்கள் அடிக்கும்போது ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறார்கள். அதனால், அப்போ நடந்த விஷயத்திற்கும் இந்த விஷயத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு நல்ல மனிதரே இல்லை என்று தான் சொல்லுவேன். நீங்கள் ஒரு நல்ல மனிதனாக இருந்தால் எங்கிருந்தாலும் அங்கு நடுநிலையாகத்தான் இருப்பீர்கள் என்று பேசி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=5Nch9-Nev3s

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி:

இதற்கு நெட்டிசன்கள் சாய் பல்லவியை விமர்சித்தும், தீவிரவாதி என்று குறிப்பிட்டும் இருந்தார்கள். அதோடு இவரின் பேச்சு மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. அதற்கு சாய் பல்லவி விளக்கமும் தந்திருந்தார். ஆனால், தற்போது அமரன் திரைப்படம் வெளியாகி இருப்பதால் இந்த பிரச்சினை மீண்டும் சோசியல் மீடியாவில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இவர் சீதாவாக நடிக்க கூடாது என்றும், BoycottSaiPallavi என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கியும் வருகிறார்கள். நித்தேஷ் திவாரி இயக்கத்தில் உருவாக்கி வரும் ராமாயணம் படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், சீதாவாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full