என் கூட நடிச்சவங்க போன் நம்பர் கூட என்கிட்டே இல்லை - ஷங்கர் படத்தில் நடித்த நடிகருக்கா இந்த நிலை ?

By Rajkumar · 1/9/2021

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு உருவான படம் தான் பாய்ஸ். இந்த படத்தில் நடிகர் சித்தார்த், நகுல், ஜெனிலியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக நடித்தவர் தான் மணிகண்டன். இந்நிலையில் நடிகர் மணிகண்டன் அவர்கள் சமீபத்தில் இன்டர்வியூ கொடுத்துள்ளார். அதில் அவர் தன்னுடைய தற்போதைய நிலை குறித்தும், வாழ்க்கை குறித்தும் பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, பாய்ஸ் படத்திற்கு பிறகு எனக்கு பெரியதாக எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைப்பற்றி நினைத்து நான் கவலைப்படவும் இல்லை. பாய்ஸ் படத்தில் நடித்ததும் எல்லாம் தானாக வந்துவிடும் என்று நான் கொஞ்சம் திமிராக இருந்துட்டேன். ஆனால், நான் இப்ப படத்துக்காக அலையும் போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் காதல், தென்மேற்கு பருவக்காற்று, சூது கவ்வும் போன்று நிறைய படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து. ஏதோ சூழ்நிலை காரணமாக கை விட்டுப்போச்சு.

அந்த சமயத்தில் தான் நான் ஆன்மீகத்தில் இறங்கினேன். அப்போது எனக்கு ஆன்மீகம் குறித்து ஒரு புக் கிடைத்தது. பத்து வருஷத்துக்கு மேலாக நான் ஆன்மீகத்தில் இருக்கிறேன். அதோடு நான் படம் கிடைக்கலைன்னும், சம்பாதிக்க முடியலைனும் என்று கவலைப்பட்டதில்லை. நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன். நாங்கள் வீடு வாடகைக்கு விட்டிருக்கும் அதில் வரும் வருமானத்தை வைத்து எங்க லைஃப போகுது. ஒரு நாலைந்து வருடங்களுக்கு முன்னாடி நான் பகல் இரவு என்று பார்க்காமல் குடித்தேன். அதனால் கொஞ்சம் உடம்பு நல்லா போட்டு விட்டது.

பின் நான் நிறைய உடற்பயிற்சிகள் செய்து என் உடம்பை குறைத்தேன். மேலும், பல வருஷங்களுக்கு பிறகு எனக்கு படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. எனக்கு சந்தோசமாக இருக்கு. மேலும், நான் நன்றாக நடித்து என் நடிப்புத் திறமையை நிரூபிப்பேன் என்று நம்பிக்கையோடு கூறி உள்ளார். நடிகர் மணிகண்டன் 10 வருடங்களுக்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிக்கும் 'பஹீரா' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full