விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்ட நபர் - நேரில் சென்று பார்த்த போலீசுக்கு ஏற்பட்ட ஷாக்.
நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சமீபகாலமாகவே இவரது படங்களிலும் சரி இவரது படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சரி பல்வேறு அரசியல் வசனங்கள் இடம்பெற்று தான் வருகிறது மேலும் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் இவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள் அதேபோல சமீபகாலமாகவே இவரது படங்கள் வெளியாகும்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் வெளியில் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போன் செய்து கூறியுள்ளார். இந்த தகவலை அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சாலி கிராமத்தில் அமைந்துள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். ஆனால், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் வெறும் புரளி என்று தெரியவந்தது.
இதையும் பாருங்க : ரஜினி தர்பார் இசை வெளியிட்டு விழாவில் சொன்ன அவமான கதை – இவர் தான் அந்த தயாரிப்பாளரா ?
பின்னர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணை சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்து விசாரித்ததில் அந்த எண் விழுப்புரத்திலிருந்து பேசப்பட்டது தெரியவந்தது. பின்னர் உடனடியாக விழுப்புரம் போலீசாருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் போலீஸார் அந்த முகவரிக்கு சென்று விசாரித்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த மாதம்தான் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து ரஜினிகாந்தின் வீட்டிற்கு நான்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் 2 மோப்ப நாய்களுடன் சென்று தீவிர சோதனை செய்யப்பட்டது. ஆனால், இந்த சோதனையில் எந்தவித கொண்டும் கிடைக்காததால் போலீசார் தங்களுக்கு வந்த மர்ம நபரின் அழைப்பை போலி என்று உறுதி செய்தனர்.