காலில் விழுந்த புதுமண தம்பதி,ராஷ்மிகாவின் Reaction - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 4/9/2023

திருமண மேடையில் ராஷ்மிகா மந்தனா செய்த செயலை விமர்சித்து நெட்டிசன்கள் செய்யும் கேலி கிண்டல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:

பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் வாரிசு என்ற படத்தில் ராஸ்மிகா நடித்து இருக்கிறார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது.

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக படம் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு தான் புஸ்பா படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா நடிக்கும் பாலிவுட் படம்:

அதோடு சமீபத்தில் ஹிந்தியில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் மிஷன் மஜ்னு. தற்போது இவர் ரன்பீர் கபருடன் அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் மேடையில் ராஷ்மிகா மந்தனா செய்திருக்கும் செயல் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, நடிகை ராஸ்மிகா மந்தனாவின் உதவியாளரின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதில் ராஸ்மிகா கலந்து கொண்டிருக்கிறார்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அப்போது அவர் மணமக்களை வாழ்த்த மேடை ஏறி இருக்கிறார். ராஸ்மிகாவை பார்த்தவுடன் மணமக்கள் இருவரும் திடீரென்று அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார்கள். உடனே ராஷ்மிகா வேகமாக அவர்களை தூக்கி ஆசீர்வாதமும் செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பலருமே ஆசீர்வாதம் செய்யும் அளவிற்கு நீ வளர்ந்து விட்டாயா? என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து திட்டி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full