இரவின் நிழல் ஆஸ்கர் என்ட்ரி முதல், ரஜினி கமல் பாராட்டு வரை - பிரிகிடா சொன்ன விஷயம்.

By Rajkumar · 25/9/2022

இரவின் நிழல் படத்தை பார்த்து ரஜினி, ரகுமான் சொன்னது குறித்து பிரகிடா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார்.

மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி இ. வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வருகின்றது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி இருந்தார்கள்.

இரவின் நிழல்:

அதிலும், இந்த படத்தில் பிரிகிடா தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இவர் ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார். நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல் முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார் பிரகிடா.

பிரிகிடா குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் பிரகிடா நடித்து அசத்தியிருப்பார். தற்போது இரவின் நிழல் படத்தில் இவர் தான் மெயின் லீடாக நடித்திருக்கிறார். முதலில் இவர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய சென்றார். ஆனால், இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு வழங்கிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் முழு முயற்சியும் போட்டு நடித்திருக்கிறார் பிரிகிடா. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான ஜூரி விருதை வென்றிருக்கிறது.

பிரிகிடா அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து பிரிகிடா பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, என்னுடைய முதல் படமே நாமினேஷனுக்காக பரிந்துரை வரை சென்றது எனக்கு ரொம்ப சந்தோஷம். இரவின் நிழல் படம் ஆஸ்கருக்கு செல்லும் என்று எதிர்பார்த்தோம். ஆனா, செல்லவில்லை. அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இரவின் முதல் படத்தை ரஜினி சார் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். படத்தைப் பார்த்து ரஜினி சார் பாராட்டி இருந்தார்.

ரஜினி- ரகுமான் சொன்ன வார்த்தை:

தெலுங்கு போர்ஷனில் நடித்த பொண்ணு ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க என்று பார்த்திபன் சாரிடம் கூறியிருந்தார். இதை பார்த்திபன் சொன்னபோது என் வாழ்க்கையில் கிடைத்த பெரிய ஆசீர்வாதமாக உணர்ந்தேன். அதேபோல், ஏ ஆர் ரகுமான் சாரும் பெரிய ஆர்டிஸ்ட் ஆக வருவீங்க என்று பாராட்டி இருந்தார். தற்போது நான் தெலுங்கில் செந்தூரம் படத்தில் ஹீரோயினியாக நடித்து முடித்து இருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் தெலுங்கு படம். படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து பெயரிடாத இன்னொரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full