சித்த மருத்துவர்ன்னு வந்து 2 மணி நேரம் இழுத்தடித்து விட்டார் - வேதனையில் நடிகர் ராஜேஷின் சகோதரர்

By subhashini · 30/5/2025

நடிகர் ராஜேஷ் இறப்பதற்கு பற்றி அவர் தம்பி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் ராஜேஷ். இவர் முதன்முதலில் பள்ளி ஆசிரியராகத்தான் பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் சினிமாவில் நடிக்க வந்தார். இவர் 70,80 காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர். இவர் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

https://www.youtube.com/watch?v=nS-2znqgV0w

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்கள் நடித்து இருந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலுமே நடித்திருக்கிறார். இவர் நடிகர் என்பதை தாண்டி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருந்தார்.

ராஜேஷ் குறித்த தகவல்:

இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் 2024 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியாகியிருந்த மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக இவர் youtube சேனலை தொடங்கி அதில் ஆரோக்கியம் மற்றும் ஜோதிடம் தொடர்பான பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். இன்னொரு பக்கம் இவர் உடல்நல குறைவால் அவஸ்த்தை பட்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை உடல்நிலை குறைவால் நடிகர் ராஜேஷ் காலமாகி இருக்கிறார். இவருடைய மறைவு தமிழ் திரை உலகில் பெரும் பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

ராஜேஷ் மறைவு:

தற்போது ராஜேஷ் உடைய உடல் சென்னை ராமபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து அவருடைய மகள் வந்ததுமே அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ராஜேஷின் மறைவு குறித்து அவருடைய தம்பி அளித்த பேட்டியில், என்னுடைய அண்ணன் ராஜேஷ் இறக்கும் அன்று அதிகாலையில் எழுந்துவிட்டார். நாங்கள் அவருடைய பக்கத்தில் இருந்திருந்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்போம். அவருக்கு எதுவுமே ஆகியிருக்காது. சித்த மருத்துவர் என்று சொல்லிக்கொண்டு வந்த ஒருவர் அவரிடம் கதை பேசிக்கொண்டு இரண்டு மணி நேரத்தை இழுத்து அடித்துவிட்டார்.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

சித்தா மருத்துவர் சொன்னது:

6 மணிக்கு வந்தவர் எட்டு மணி வரை பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு தான் அண்ணனுக்கு உடம்பு இன்னும் முடியாமல் போனது. நாங்கள் தாமதித்துப் போனதுதான் பெரிய தவறாகிவிட்டது. அவர் விஷயத்தாரி என்பதால் நாங்களும் கவனிக்காமல் விட்டோம். அது எங்களுடைய தவறுதான். அவருடைய அலட்சிய போக்கு தான் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் இதுபோன்று எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நெஞ்சு வலிக்கிறது என்று அவர் சொல்லவே இல்லை. இரவு முழுவதும் தூக்கமில்லை. மூச்சு விடுவதில் ரொம்பவே சிரமமாக இருப்பதாக சொன்னார். அதனால் உடனே மருத்துவமனைக்கு போகலாம் என்று சொன்னார்.

https://www.youtube.com/watch?v=Eic3Qa_o0HY

அண்ணன் இறப்பு பற்றி சொன்னது:

நம்மிடம் தான் எல்லா கருவிகளுமே இருக்கிறது என்று சொல்லி அவரே பல்ஸ் பார்த்தார். நன்றாக தான் இருந்தார். மருத்துவரையும் வீட்டுக்கு அழைத்து வந்து பார்க்க செய்யலாம் என்பதற்காக அவரை அழைக்க நான் போனேன். ஆனால், பாதி வழியிலேயே நான் சென்று கொண்டிருக்கும் போது என்னுடைய அண்ணன் மகன் போன் செய்து, அப்பா நன்றாக இருக்கிறார் என்று சொன்னார். அதனால்தான் நானும் திரும்பி வந்துவிட்டேன். அதுதான் மிகப்பெரிய தவறாகி விட்டது. மருத்துவர் வந்திருந்தால் அவருடைய உடல் நிலையின் உடைய பிரச்சனை தீவிரம் புரிந்திருக்கும். நாங்கள் அதற்கு பிறகு தான் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றோம். பாதி வழியிலேயே இறந்துவிட்டார் என்று எமோஷனலாக கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full