கல்கி படத்தில் வரும் சோழர்கால கோவில், எங்கு இருக்கிறது? புதைந்த ரகசியம் இதோ
'கல்கி' படத்தில் வரும் சோழர்கால கோவில் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக கல்கி படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியா முழுவதும் வெளியான கல்கி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இந்த படம் வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தினுடைய இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் சோழர் கால கோவில் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த படத்தின் ஒரு காட்சியில் பண்டையகால கோவில் காட்டப்பட்டிருக்கும். ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டம் பெருமாள்ளபாடு என்ற ஒரு கிராமத்தில் அந்த கோவில் இருக்கிறது. இந்தக் கோயில் மண்ணுக்குள் புதைந்த படி இருக்கிறது. இத்தனை நாட்களாக இந்த கோவிலை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் கல்கி படத்தில் இடம் பெற்றதிலிருந்து இந்த கோவிலை காண பலரும் வந்து செல்கிறார்கள்.
சோழர் கோவில்:
அதனுடைய பல வீடியோக்கள் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் பயங்கர வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலை காண மக்களுடைய எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது ஏராளமான யூடியூபர்களும் இந்த பண்டையகால கோவிலை பற்றி தான் தங்களுடைய சேனல்களில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். ஆந்திர மக்களுமே இந்த கோவிலை வரிசையில் நின்று பார்த்துவிட்டு செல்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=3zVoQ5jiLGI
கல்கி படம் :
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கல்கி’. இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே மகாபாரதப் போரை காண்பிக்கிறார்கள். இந்த மகாபாரதப் போர் முடிந்த 6000 ஆண்டுகள் பிறகு தான் கல்கி படத்துடைய கதை துவங்குகிறது.
படம் குறித்த தகவல்:
உலகத்தின் முதலும் கடைசி நகரமாக மிஞ்சி இருப்பது காசி. மக்கள் அனைவரும் சுப்ரீம் யாஸ்கினின் கமலஹாசனின் கொடுங்கோல் ஆட்சிக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள். இன்னொரு பக்கம் கங்கை நதி வற்றி பஞ்சத்திலும் பசியிலும் மக்கள் வாழ்கிறார்கள். மறு பக்கம், அதிகாரம் செல்வம் படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பாக, தங்களுக்கான இடத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த இடத்திற்குள் புகுந்து தனக்கு தேவையான பணத்தை சேர்ந்து தானும் சந்தோசமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஹீரோ பிரபாஸ் நினைக்கிறார்.
படத்தின் கதை:
கமலஹாசனின் அரசை அளித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட மக்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை கல்கி. கல்கி ஆக பிறக்கும் குழந்தையை தான் தீபிகா படுகோன் சுமக்கிறார். எப்படியாவது அந்த குழந்தையை அளித்து ப்ராஜெக்ட் கே என்ற தன்னுடைய குறிக்கோளை அடைய வேண்டும் என்று கமலஹாசன் துடிக்கிறார். இறுதியில் அஸ்வத்தாமா தனது சாபத்திலிருந்து மீண்டாரா? கமலஹாசனின் ப்ராஜெக்ட் கே திட்டம் என்ன? பிரபாஸின் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதை.