தற்போதுள்ள மாணவர்கள் செய்யும் அட்ராசிடிக்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. பட்டா கத்தியை பயன்படுத்துவது, கல்லூரியில் ரகளை செய்வது என்று தற்போதுள்ள மாணவர்கள் பல அட்டூழியங்கள் செய்த விடீயோக்களை நாம் அவ்வப்போது கண்டு கொண்டு தான் வருகின்றோம்.

ஜல்லி கட்டு போராட்டத்தை நடத்திய மாணவர்களும் இருக்கின்றனர் மக்களிடம் சில்மிஷம் செய்து மல்லுகட்டும் மாணவர்களும் இருக்கிறார்கள். அப்படிபட்ட மாணவர்கள் தான் சமீபத்தில் சென்னை பட்டாபிராம் முதல் அண்ணா சதுக்கம் வரை செல்லும் பேருந்தில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து 20 மாணவர்கள் ஏறி வந்துள்ளனர்.

Advertisement

நேற்று விடுமுறை முடிந்து கல்லூரி துவங்கியதால் அவர்கள் பேருந்திற்கு மாலை அனுவித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதோடு நிறுத்தி விடாமல் பேருந்தின் மேரற்கூறையில் மீது ஏறியும் மாணவர்கள் சிலர் கத்தி கோஷமிட்டனர். பட்டாசுகள் வெடித்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பேருந்து மெதுவாக ஊர்வலம் வர அப்போது பேருந்து முன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவர் திடீரென பிரேக் போட்டதால் அவர்கள் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநரும் பிரேக் அடித்தார். இதில் பேருந்து மேற்கூரையின் மீது இருந்த மாணவர்கள் கொத்துக் கொத்தாக மேலிருந்து கீழே விழுந்தனர். இதில் மாணவர்களுக்கு சிறு சிறு  காயங்கள் ஏற்பட்டன.

Advertisement

சென்னையில் பஸ் டே கொண்டாடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.ஆனால், நேற்று கல்லூரி தொடங்கியதையொட்டி தடையையும் மீறி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்.

Advertisement
Advertisement