'தமிழக வெற்றி கழகம்' நிர்வாகிகள் முன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்ட சபதம்- என்ன சொல்லி இருக்காரு பாருங்க
தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்டிருக்கும் சபதம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைவர் பரணி பாலாஜியின் மகளுடைய மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி இருந்தார். பின் அவர் அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசியிருந்தார். அப்போது அவர், தளபதியின் உடைய பிறந்தநாள் மட்டும் தான் வருடம் 365 நாளும் கொண்டாடுகிறோம்.
விழாவில் புஸ்ஸி ஆனந்த் சொன்னது:
நாங்கள் கடந்த 30 வருடமாக நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். பல ஏழை மக்களுக்கு 'தமிழக வெற்றி கழகம்' உதவி செய்து கொண்டிருக்கின்றது. தளபதி என்று சொன்னாலே நமக்கு எனர்ஜி கிடைக்கும். நாம் கண்டிப்பாக அந்த தளபதியை தமிழ்நாட்டுடைய முதல்வராக உட்கார வைக்க வேண்டும். இதை நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய ஒவ்வொருவரின் உழைப்பால் தான் தமிழ்நாட்டினுடைய இலக்கு வெற்றி பெறும்.
விஜய் குறித்து சொன்னது:
கண்டிப்பாக 2026க்காக உழைக்க வேண்டும், உண்மையாக உழைக்க வேண்டும், மக்களுக்காக உழைக்க வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். தளபதியை 2026 இல் முதல்வர் ஆக்குவோம் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக இருப்பவர் விஜய். இவருடைய ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் நடத்தி வருவது அனைவ்ரும் அறிந்ததே. இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும், அனைவ்ரும் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை.
விஜய் கட்சி:
அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர் 'தமிழக வெற்றி கழகம்' என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் அறிவித்து இருந்தார். இதனால் ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கட்சி சார்பாக விஜய் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
விஜய் அரசியல் குறித்து சொன்னது:
அதோடு பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் கட்சி நிர்வாகிகளை கவனித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கட்சியின் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக புது செயலியும் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்கள். தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கோட்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதை அடுத்து 'தளபதி 69' என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்ட இருக்கிறார்.