நிச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட புட்ட பொம்மா புகழ் நடிகை பூஜா ஹெக்டே.

By Rajkumar · 3/2/2021

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'முகமூடி'. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். 'சூப்பர் ஹீரோ' படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு 'ஒக்க லைலா கோஷம்' என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் 'முகுந்தா' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே. தெலுங்கு திரையுலகுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த பூஜா ஹெக்டே, அடுத்ததாக பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்தார். 'மொகெஞ்ச தாரோ' என்ற படத்தில் ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹரிதிக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே.

இப்படி இந்தி, தெலுங்கு என்று பிசியாக நடித்து வரும் பூஜா சமீபத்தில் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த 'அல வைகுந்தபுரமுலோ' என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.அம்மணி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளிடும் வழக்கம் கொண்ட பூஜா ஹெக்டே தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full