இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பைரி. இந்த படத்தில் சையத் மஜித், மேக்னா எலன், சரண்யா, விஜி சேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை டி.கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்து இருக்கிறார். புறா பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் புறா வளர்ப்பதும், புறா பந்தயம் குறித்து தான் தொடங்குகிறது. நாகர்கோவில் அருகே உள்ள ஒரு ஊரில் நூறு வருடங்களுக்கு மேலாக புறா வளர்ப்பது, புறா பந்தயம் விடுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த புறா பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கதையின் நாயகன் சையத் மஜித் உடைய ஆசை. ஆனால், தன்னுடைய மகன் படிக்க பெரிய ஆளாக வேண்டும் என்றும், புறா வளர்க்கக்கூடாது என்ற கண்டிப்பில் தாய் விஜி சேகர் இருக்கிறார்.

Advertisement

இருந்தும் தன்னுடைய அம்மா எதிர்ப்பை மீறி புறா பந்தயத்தில் ஹீரோ மஜித் கலந்து கொல்ல நினைக்கிறார். இதற்காக புறாக்களையும் தயார் செய்கிறார். இந்த நேரத்தில் தான் ஊரின் பிரபல ரவுடியான வினு மோசடி செய்து புறாவை அதிக நேரம் பறக்க விடுகிறார். இந்த உண்மை சையத்திற்கு தெரிய வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதனால் இருவருக்கும் சண்டை நடைபெறுகிறது. பின் புறா பந்தயத்தில் சையத் கலந்து கொள்ளும்போது அதை வில்லன் வினு களைத்து விடுகிறார்.

இதனால் இருவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் கலவரம் வெடிக்கிறது. அதற்கு பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதி கதை. புறா வளர்ப்பு, புறா பந்தயம் போன்ற விஷயத்தை விவரமாக படத்தில் காண்பித்து இதில் நட்பு, காதல், குடும்ப பாசம், பகை என அனைத்தையும் கலந்த கமர்சியல் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். இதில் வரும் கிராபிக்ஸ் காட்சி, படத்தினுடைய உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் இயக்குனருடைய உழைப்பு தெரிகிறது.

Advertisement

எதையும் எதிர்கொள்ளும் துடிப்பான இளைஞர் லிங்கம் கதாபாத்திரத்தில் மஜித் நடித்திருக்கிறார். புறா மீது இருக்கும் ஆர்வம் பார்வையாளர் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. ரவுடி வில்லனுடன் மோதும் சண்டை காட்சிகள் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் மேக்னா எலன், சரண்யா ரவிச்சந்திரன் என்று இரண்டு கதாநாயகிகள் வருகிறார்கள். கதைக்கு கதாநாயகி வேண்டும் என்பதால் சில காட்சிகள் மட்டும் இயக்குனர் வைத்திருக்கிறார். கதாநாயகிகளை தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்.

Advertisement

மேலும் கதாநாயகனின் நெருங்கிய நண்பராக இயக்குனர் ஜான் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாம் நன்றாக இருக்கிறது. சேகர் முருகனின் வி எப் எக்ஸ் நுட்பமும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், படத்தில் வன்முறை காட்சிகளிலும் கெட்ட வார்த்தைகளும் தான் பெரிய மைனஸ் ஆக இருக்கிறது. கொஞ்சம் குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கிராமத்து சாயலை காட்டுகிறேன் என்று இயக்குனர் நிறைய காண்பித்து விட்டார். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

கதைக்களம் அருமை

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்

வி எப் எக்ஸ் காட்சிகள் சிறப்பு

புறா வளர்ப்பது, பந்தயம் குறித்து தெளிவான வரலாறு

குறை:

வன்முறை காட்சிகளை குறைத்திருக்கலாம்

சில கெட்ட வார்த்தைகளையும் தவிர்த்திருக்கலாம்

படத்தில் தேவையில்லாத காட்சிகள் நீக்கி இருக்கலாம்

கதாநாயகிகள் படத்திற்கு தேவையே இல்லை

பாடல்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை

இறுதி அலசல்:

மொத்தத்தில் பைரி- உச்சத்தை தொட முடியவில்லை

Advertisement