கேப்டன் இறந்து அவரின் முதல் பிறந்தநாள் - நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர்
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள் விழா குறித்து தகவல்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதன் பின் விஜயகாந்தினுடைய பணியை பாராட்டி 'பத்மபூஷன்' விருது சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு அறிவித்து இருந்த நிலையில், அவரின் மறைவுக்குப் பின்பு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் விருதை பெற்றுக் கொண்டார். இதற்கு ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் பலருமே வாழ்த்தி சந்தோஷப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் குறித்த தகவல்:
மேலும், விஜயகாந்த் அவர்கள் நடிப்பையும் தாண்டி பெரிய ஹீரோ என்ற தலைகனம் இல்லாதவர். அனைவருடன் சேர்ந்து பழகி உண்ணும் குணம் கொண்டவர். பல தொழில் நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆரம்பத்தில் உதவி செய்தது விஜயகாந்த் தான். இந்நிலையில் இன்று கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
https://www.youtube.com/shorts/ptq429t8xQQ
விஜயகாந்த் பிறந்தநாள்:
அதாவது, கேப்டனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். ஆண்டுதோறும் விஜயகாந்தின் பிறந்தநாளில், தேமுதிக சார்பாக வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவரின் மறைவுக்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி தொண்டர்கள் மற்றும் விகாய்காந்த ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.
நினைவிடத்தில் மரியாதை:
மேலும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன், தேமுதிக கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சதீஷ், முக்கிய நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு கேப்டன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து விஜயகாந்தின் திருவுருவச் சிலையை, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.
சிறப்பு அன்னதானம்:
அது மட்டும் இல்லாமல் கேப்டனின் பிறந்தநாளை ஒட்டி இன்று காலை முதலே, விஜயகாந்தின் நினைவிடத்தில் உணவு வழங்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மதியமும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கேப்டனின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி தமிழ் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி கட்சியின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூட, பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார்.