அறிமுக இயக்குனர் ஆர்.சீனிவாசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள படம் கார்பன். இந்த படத்தில் விதார்த், தான்யா, மாரிமுத்து உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். விவேகானந்த் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். போகி பண்டிகைக்கு வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

Advertisement

படத்தில் கதாநாயகன் ஐடிஐ படிப்பு முடித்து இருக்கிறார். ஆனால், காவல்துறையில் சேரவேண்டும் என்று கனவோடு இருக்கிறார். இதனால் வேலைக்கு செல்லாமல் ஹீரோ ஊர் சுற்றி கொண்டிருக்கிறார். கார்ப்பரேட் கம்பெனியில் விதத்தின் தந்தை மாரிமுத்து வேலை செய்கிறார். தன் மகன் ஒரு பொறுப்பாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி கொண்டு இருக்கிறானே என்று கோபப்படுகிறார். இது ஒரு பக்கமிருக்க வித்தார்த்துக்கு கனவில் வருகிற விஷயங்கள் நிஜத்திலேயே நடந்து வருகிறது. இதனால் வித்தார்த் வியந்து பயந்து போகிறார்.

வித்தார்த்துக்கு வரும் கனவு:

அப்போது ஒரு நாள் கனவில் வித்தார்த் தான் வேலைக்கு சென்று முதல் மாத சம்பளம் வாங்குகிறார். சம்பளம் வாங்கும் சமயத்தில் அவரின் தந்தைக்கு விபத்தில் ஏற்படுவது போல தோன்றுகிறது. பின் வித்தார்த் தடுக்க முயற்சிப்பதற்குள் அந்த விபத்து நடந்து விடுகிறது. உடனே வித்தார்த் விழித்து பார்க்கிறார். இது கனவு என்று உணர்கிறார். ஆனால், கடைசியில் தன் தந்தைக்கு நிகழ்வது விபத்தல்ல ஒரு கொலை முயற்சி என்று விதார்த்துக்கு புரிகிறது.

Advertisement

கொலையை தடுத்தாரா:

இந்த மாதிரி தினம் தினம் கனவில் வருவது நிஜத்தில் ஏன் நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் ஹீரோ. உண்மையில் தன் தந்தைக்கு நிகழ்வது கொலையா? இந்த கொலையை நிகழ்த்த காரணம் என்ன? கொலையாளிகளை கதாநாயகன் வித்தார்த் பிடித்தாரா? ஆசைப்பட்ட கனவு வேலைக்கு சென்றாரா? என்பதே படத்தின் மீதி கதை. கதாநாயகியாக நடித்திருக்கும் வித்தார்த் வழக்கம்போல் தன்னுடைய நடிப்பை அழகாக காண்பித்திருக்கிறார்.

Advertisement

படத்தில் இருக்கும் நடிகர்கள்:

இது இவரின் 25-வது படம் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்த படம் உள்ளது. இவருடைய எதார்த்தமான நடிப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இதுவரை துணை கதாபாத்திரங்களில் நடித்த தான்யா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. இவர் தன்னுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார். மாரிமுத்து படத்தில் பொறுப்பான தந்தையாக நடித்து இருக்கிறார்.

இயக்குனர் கைவண்ணம்:

இவர்களை தவிர படத்தில் வரும் நடிகர்களும் தங்களுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் இயக்குனர் சீனிவாசன் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். திரைக்கதை மூலம் இவர் எந்த இடத்திலும் புது பட இயக்குனர் என்று சொல்லும்படியாக இல்லாமல் அழகாக கொண்டு சென்றிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் திரையரங்கில் கைதட்டல் வாங்கி தந்திருக்கிறது. ஒரு புதுவிதமான முயற்சியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. ரசிகர்கள் பணம் கட்டி டிக்கெட் வாங்கியதற்கு வீண்போகவில்லை என்று தான் சொல்லனும்.

பிளஸ்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

படத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

கதைக்களம் கொண்டு சென்ற விதம் அழகாக இருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சி கைதட்டல்களை வாங்கி இருக்கிறது.

மைனஸ்:

முதல் பாதி கொஞ்சம் சுறுசுறுப்பாக சென்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இன்னும் படத்தில் கொஞ்சம் மசாலாவை தடவி விறுவிறுப்பு காண்பித்து இருந்திருந்தால் அற்புதமாக அமைந்திருக்கும். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில் கார்பன்- ரசிகர்களை கவர்கிறான்.

Advertisement