கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா? அதிருப்தியில் ரசிகர்கள்- உண்மை நிலவரம் இது தான்

By Arun · 11/7/2024

கார்ட்டூன் தொடர்கள் ஒளிபரப்பாகும் சேனல் மூடப்பட இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே குழந்தைகளின் ஃபேவரைட் சேனலாக 'கார்ட்டூன் நெட்வொர்க்' இருக்கிறது. குறிப்பாக, 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த சேனல் என்றால் கார்ட்டூன் தான். இதனால் நிறைய கார்ட்டூன் சேனல்களில் தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சோசியல் மீடியா பிரபலமாக இல்லாத காலத்திலும் குழந்தைகளின் பொழுதுபோக்காக கார்ட்டூன் நெட்வொர்க் தான் இருந்தது. டாம் அண்ட் ஜெர்ரி, பென் 10, டீன் டைட்டன்ஸ், பவர் பாப் கேர்ள்ஸ், பாப்பாய், போக்கி மேன், மிஸ்டர் பீன், டோரா புஜ்ஜி போன்ற பல கார்ட்டூன் தொடர்கள் வெளியாகியிருந்தது. இதனால் குழந்தைகள் அனைவருமே கார்ட்டூன் சேனலை தான் விரும்பி பார்த்து வந்தார்கள்.

கார்டூன் குறித்த தகவல்:

சமீபகாலமாக பெரியவர்கள் மத்தியிலும் இந்த கார்ட்டூன் சேனல்கள் வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் வித்தியாசம் வித்தியாசமான கான்செப்டில் கார்ட்டூன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கார்ட்டூன் சேனல்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூட இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கார்டூன் சேனல் நிறுத்தம்:

இந்த செய்தி காட்டுத் தீயை விட வேகமாக இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது. அதிலும், 'RIPCartoonNetwork' என்ற ஹாஸ்டேக் தான் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். ஆனால் கார்ட்டூன் நெட்வொர்க் மூட இருப்பது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் உண்மையிலேயே கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.

அனிமேஷன் ஒர்க்கர்ஸ் இக்னைடட் :

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரித்ததில், அனிமேஷன் ஒர்க்கர்ஸ் இக்னைடட் என்ற எக்ஸ் பக்கம் தான் கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறது என்று அனிமேஷனை வெளியிட்டு இருக்கிறது. இதிலிருந்து கார்ட்டூன் நெட்வொர்க்கை மூடப்படுவதாக பரவிய தகவல் பொய், உண்மையில் கார்ட்டூன் நெட்வொர்க் தொடர்கள் எதுவும் மூடப்படவில்லை என்று சேனல் தரப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உண்மை நிலவரம்:

அனிமேஷன் ஒர்க்கர்ஸ் இக்னைடட் என்பவர்கள் தொழில்துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை சந்திப்பதால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரிப் கார்ட்டூன் நெட்வொர்க் என்று பயன்படுத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள். இதைதான் நெட்டிசன்கள் வைரலாகி வருகிறார்கள். மற்றபடி கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் எதுவும் மூடப்படவில்லை என்று தெரிந்தவுடன் 90ஸ் கிட்ஸ்கள் பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full