வாடகைக்கு குடியிருந்தவரை காலி செய்ய மிரட்டியதாக நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு - நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

By subhashini · 14/6/2024

வாடகைக்கு குடியிருந்த வரை காலி செய்ய சொல்லி நடிகர் தனுஷ் மிரட்டி இருந்ததாக எழுந்து இருக்கும் சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலக்ஷ்மி என்பவருக்கு சொந்தமாக பங்களா ஒன்று இருக்கிறது. இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு அஜய்குமார் லுனாவத் என்பவர் வாடகைக்கு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தன்னை வீட்டை காலி செய்ய சொல்லி தனுஷ் தரப்பில் மிரட்டி இருந்ததாக அஜய்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னுடைய வீட்டுக்கு சிலர் வந்து, இந்த வீட்டை தனுஷ் விலைக்கு வாங்கி விட்டார். உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டி இருந்தார்கள். 2024 ஆம் ஜனவரி வரை வீட்டுக்கான வாடகை ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஆனால், வீட்டை உடனடியாக காலி செய்ய சொல்லி மிரட்டி இருந்தார்கள்.

தனுஷ் மீது புகார்:

நான் காலி செய்ய மறுத்ததால் மின்னிணைப்பு, குடிநீர் இணைப்பு எல்லாம் துண்டித்து விட்டார்கள். மேலும், முறையாக நான் வாடகையும் செலுத்தி வருகிறேன். எந்த ஒரு அறிவுப்பும் இல்லாமல் திடீரென்று நிறைய நபர்கள் என்னுடைய வீட்டுக்குள் புகுந்து வீட்டை காலி செய்ய கட்டாயப்படுத்தினார்கள். இது சட்டவிரோத செயல். இந்த விவகாரத்தில் தலையிட்ட தனுஷ் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நீதிபதி உத்தரவு:

பின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, தனுஷிடம் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தி இருந்தார்கள். அப்போது தனுஷ் தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. கடந்த மே 31 ஆம் தேதி இந்த வீட்டினுடைய சாவி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து தனுசுக்கு எதிராக போடப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து முடித்து வைத்திருக்கிறார்.

தனுஷ் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு வருகிறார் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். மேலும், இவர் பாலிவுட், ஹாலிவுட் என எல்லா படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

தனுஷ் நடிக்கும் படம்:

கடைசியாக தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து இருந்தார். தனுஷ் மற்ற படங்களை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இருந்தும் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. தற்போது இவர் ராயன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full